யெமனில் வெடி மருந்து தொழிற்சாலை ஒன்று வெடித்து சிதறியதில் 121 பேர் பலியாகினர்.
யெமனில் உள்ள ஏபியான் மாகாணத்தில் வெடி மருந்துத் தொழிற்சாலை ஒன்று உள்ளது. அருகில் உள்ள ஜார் நகரில் சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்துவதற்காக இங்கு வெடி மருந்து தயாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த ஆலைக்குள் அதிரடியாக புகுந்து அதனைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட அமைப்பு அல்கொய்தா தாங்கள் எடுத்துக் கொண்டது போக மீதமான வெடி மருந்தை அப்படியே விட்டு விட்டு சென்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் நேற்று அதில் நுழைந்து வெடிமருந்தை அள்ளிச் சென்றனர்.
இந்நிலையில் அந்த வெடிமருந்து ஆலை திடீரென வெடித்து சிதறியது. இதில் சுற்றுப்புற பகுதிகளில் வசித்த பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 121 பேர் கொல்லப்பட்டதாகவும் 45 பேர் காயமடைந்ததாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து இந்த தொழிற்சாலையின் நிர்வாகி மொஹிம் சலீம் கூறுகையில், ஏற்கனவே அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் அல் கொய்தாவினர்தான் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றார்.
சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர் கருகிப் போன உடல்களை மீட்டனர். மேலும் நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

0 commentaires :
Post a Comment