80 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 374 மின் விநியோகத் திட்டங்கள்
கிழக்கு மாகாணத்தில் மின்சார வசதி யற்ற கிராமிய மக்களுக்கு மின்சார வச தியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக புதிதாக 374 மின்சாரத் திட்டங்களை ஆரம்பிக்க மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்காக 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட் டுள்ளது. இதன் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் 127 திட்டங்களும் மட்டக் களப்பு மாவட்டத்தில் 111 திட்டங்களும் அம்பாறை மாவட்டத்தில் 136 திட்டங்களும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர புதிதாக 1865 பேருக்கு மின் இணைப்பும் வழங்கப்பட உள்ளதாகவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சீன எக்சிம் வங்கியின் 60 மில்லியன் டொலர் கடனுதவியுடன் மின்சார அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அம்பாறையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 20 மில்லியன் டொலர் நிதி உதவியுடன் மின்சாரத் திட்டங்கள் முன்னெடுக்க உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது. அடுத்த வருட முடிவுக்குள் கிழக்கு மாகாணத்திற்கு 100 வீதம் மின்சாரவசதி அளிக்கப்படும் எனவும் அமைச்சு கூறியது.
0 commentaires :
Post a Comment