3/31/2011

திருக்கோவில் வலய விளையாட்டு விழா

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி நிகழ்வு இன்று வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி, என்,புள்ளநாயகம் தலைமையில் இடம் பெற்றது. இவ்விளையாட்டு விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கருத்து தெரிவிக்கையில், புதிதாக உருவாக்கப்பட்ட திருக்கோவில் கல்வி வலயம் தற்போது கூடிய வளர்ச்சியினை கண்டு கொண்டிருக்கின்றது.
அதன் ஓர் அங்கமாகவேதான் இவ் விளையாட்டு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. மாணவர்கள் கல்வியில் மாத்திரமின்றி விளையாட்டு போன்ற ஏனைய புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் திறமையினைக்காட்டி தேசிய ரீதியில் போட்டியிடும் அளவிற்கு நாம் முன்னேற வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இவ் விளையாட்டு விழாவிற்கு கிழக்கு மாகாண ஆளுணர் ரியர் அட்மிரல் மொகான் விஜே விக்ரம, மாகாண விவசாய அமைச்சர் து.நவரெட்ணராஜா, மாகாணசபை உறுப்பினர்களான சோ.புஸ்பராஜா, பூ.பிரசாந்தன், எஸ்.செல்வராசா மற்றும் வலயக்கல்வி அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)

திருக்கோவில் பிரதேச சபைக்கு முதலமைச்சர் திடீர் விஜயம்



 முதலமைச்சரும் மாகாண உள்ளுராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று (29.03.2011) திருக்கோவில் பிரதேச சபைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பிரதேச சபை முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பிரதேச சபை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. இவ்விசேட கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், விசேட ஆணையாளர் அழகரெட்ணம் மற்றும் செயலாளர் ஜிவாஜி மற்றும் பிரதேச சபை உத்தியோகஸ்த்தர்கள் ஊழியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)

அடுத்த வருட முடிவுக்குள் கிழக்கு மாகாணத்திற்கு 100 வீதம் மின்சாரவசதி

80 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 374 மின் விநியோகத் திட்டங்கள்

கிழக்கு மாகாணத்தில் மின்சார வசதி யற்ற கிராமிய மக்களுக்கு மின்சார வச தியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக புதிதாக 374 மின்சாரத் திட்டங்களை ஆரம்பிக்க மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்காக 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட் டுள்ளது. இதன் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் 127 திட்டங்களும் மட்டக் களப்பு மாவட்டத்தில் 111 திட்டங்களும் அம்பாறை மாவட்டத்தில் 136 திட்டங்களும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர புதிதாக 1865 பேருக்கு மின் இணைப்பும் வழங்கப்பட உள்ளதாகவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சீன எக்சிம் வங்கியின் 60 மில்லியன் டொலர் கடனுதவியுடன் மின்சார அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அம்பாறையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 20 மில்லியன் டொலர் நிதி உதவியுடன் மின்சாரத் திட்டங்கள் முன்னெடுக்க உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது. அடுத்த வருட முடிவுக்குள் கிழக்கு மாகாணத்திற்கு 100 வீதம் மின்சாரவசதி அளிக்கப்படும் எனவும் அமைச்சு கூறியது.
»»  (மேலும்)

கலைக்கப்படாத 22 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் மேலும் 6 மாத காலத்துக்கு நீடிப்பு *

கலைக்கப்படாத 22 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலத்துக்கு நீடிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி மேற்படி 22 உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுகிறது.
2011 ஜுலை 30ஆம் திகதியுடன் பதவிக்காலம் முடிவடையும் 22 உள்ளூராட்சி சபைகளும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாவதற்கு 2011ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க அவசர நிலை சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி நிறுவனங்கள் முகாமைத்துவ கட்டளையின்கீழ் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்படி மேற்படி 22 உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக்காலம் நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமான அறிவித்தல் 29ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
தெஹிவளை-கல்கிஸ்ஸை மாநகர சபை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, கொலன்னாவ நகரசபை, மொரட்டுவ மாநகரசபை, கொடிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை, நீர்கொழும்பு மாநகர சபை, கம்பஹா மாநகரசபை, கண்டி மாநகர சபை, குண்டசாலை பிரதேச சபை, கண்டி, கங்கவட்ட கேந்திர பிரதேச சபை, மாத்தளை மாநகரசபை, நுவரெலியா மாநகரசபை, காலி மாநகரசபை, மாத்தறை மாநகரசபை, அம்பாந்தோட்டை மாநகர சபை, சூரியவெவ பிரதேச சபை, அம்பாந்தோட்டை பிரதேச சபை, கல்முனை மாநகர சபை, குருநாகல் மாநகரசபை, அனுராதபுரம் மாநகரசபை, பதுளை மாநகரசபை, இரத்தினபுரி மாநகர சபை போன்ற 22 உள்ளூராட்சி சபைகளும் இவ்வாறு பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளன
»»  (மேலும்)

3/30/2011

தொட்டாலே சொஸ்தமாவீர்கள் என்று பல்லாயிரம் மக்களை ஏமாற்றும் ஆசாமி பாபா மருத்துவமனையில்

 
உடல் நலக்குறைவால் சத்ய சாயிபாபா புட்டபர்த்தியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது சாயிபாபா குணமடைந்து வருவதாகவும், கவலைப்பட ஏதுமில்லை என்றும் வைத்தியர்கள் தெரிவித்தனர். 
thodt_tht
»»  (மேலும்)

பேய் விரட்டும் பூசாரி யோகேஸ்வரனுக்கு

நீர் பூசாரிக்கான பணியினை மேற்கொள்வதற்காக மட்டும் பாடசாலைக்குச் சென்றீரா, அன்றி இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்புக்கள் பற்றியும் ஏதேனும் படித்த நீரா? இலங்கை (9) மாகாணங்களாக பிரிக்கப்பட்டு அங்கு நிர்வாகச் செயற்பாடுகள் இடம்பெற்றமை உமக்கு தெரியுமா? உமக்கு அரசியலில் அமர்வதற்கு பிச்சைபோட்ட பயங்ரவாதியான பிரபாகரனால்தான் (இலங்கை—இந்திய ) உடன்படிக்கைக்கமைய கிழக்கு மாகாணத்தில் வாழும் ஏனைய இரு இனத்தவர்களான, முஸ்லிம் மக்களினதும், சிங்கள மக்களினதும் அங்கீகாரமோ, அன்றி சம்மதமோ பெறாது இணைக்கப்பட்ட அன்றைய வடகிழக்கு மாகாணம் எனக்கருதப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான நிர்வாகக்கட்டமைப்பு சிதைக்கப்பட்டதே தவிர அவ்விடயத்திற்கு இன்றைய கிழக்கின் முதல்வரான சிவநேசதுரை சந்திரகாந்தன் காரணகர்த்தா அல்ல என்பதனை புலிக்கூட்டமைப்பிற்கு பாதணி சுமக்கும் நீர் அறிந்து கொள்ளவேண்டும்.
பிரபாகரனிடம் பிச்சை எடுக்கச்சென்று வடகிழக்கு மாகாணங்களை இணையவிடாது பாராளுமன்றப் பதவிகளுக்காக மட்டும் பாதணிசுமந்த பரதேசிகளிடம் சென்று இதற்கான பதிலைக்கேளும். நீர் வக்காலத்து வாங்கும் புலிக்கூட்டமைப்பின் உலக வல்லுனர்களென தம்மை அடையாளப்டுத்தும் சட்டமேதைகளெல்லாம் அன்று வடகிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகளை விமல் வீரவன்ஸ தலைமையிலான குழுவினர் மேற்கொண்டபோது பிரபாகரனின் பாதணிகளுக்கு தூசிதட்டிக்கொண்டு வன்னியில் உறங்கியமையை நீர் அறியவில்லையா?
இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் (16.10.2006)ம் திகதியன்று வழங்கப்ட்ட தீர்ப்பிற்கு அமைவாக கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டதே தவிர சந்திரகாந்தனால் அல்ல!
நீர் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கான பதிலை கொலைகாரன்களான சம்பந்தனிடமும், சேனாதியிடமும் சென்று கேட்பதே பொருத்தமானது. அல்லது மீண்டும் பாலர்பாடசாலைக்குச் சென்று இலங்கையின் ஆட்சியமைப்பு நிர்வாகம்பற்றி அறிவதற்கான முயற்சியினை மேற்கொள்வதே உமது முட்டாள்தனத்தினை மாற்றிக்கொள்வதற்கான வழியாகும்.
பேய் விரட்டும் பூசாரியின் அறிக்கை
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வடக்கு கிழக்கு மக்களை பிரித்து கிழக்கு மக்களின் துன்பத்தில் குளிர்காயும் இவ்வேளை தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக வரவேண்டும் என கூறுவதற்கு இவருக்கு என்ன தகுதி உண்டு.
அனைத்து தமிழ் கட்சிகளும் வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்தும் இவ்வேளை கிழக்கு தனித்துவம் கோரிக்கொண்டு பிரதேசவாதம் வளர்க்கும் கிழக்கு முதலமைச்சர் எவ்வித அருகதையும் அற்றவர். சிறுபிள்ளைத்தனம் எனது கூற்று என கூறுவதற்கு அவருக்கு எவ் அருகதையும் இல்லை. கிழக்கில் ஆயுதக்கலாசார அரசியல் நீண்டகாலத்துக்கு நிலைக்க இடமளிக்க முடியாது எனவும் பதில் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்
     நன்றி  * மகாவலி 
»»  (மேலும்)

குடிசன மதிப்பீட்டிற்கான பணிகள் ஆரம்பம் * இந்த வாரம் வீடுகளில் லேபல்கள் ஒட்டும் பணி * நாடு முழுவதும் 65,000 வலயங்களாகப் பிரிப்பு

குடிசன மதிப்பீட்டிற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இந்த வாரம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக புள்ளிவிபர வியல் திணைக்களப் பணிப்பாளர் எச். ஆர். குணசேகர தினகரனுக்குத் தெரிவித்தார்.
இதன்படி, இந்த வாரம் முதல் நாடு முழுவதும் உள்ள சகல வீடுகள், கட்டடங்கள் என்பவற்றை பதிவு செய்து மதிப்பீட்டு அடையாளங்கள் (லேபல்) ஒட்டும் பணிகள் முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் இந்த வருட இறுதிக் காலாண்டில் குடிசன மதிப்பீடு நடத்தப்பட உள்ளது.
இதன் முதற்கட்டமாக சகல கட்டடங்கள், வீடுகள் என்பவற்றுக்கு இலக்கமொன்றை வழங்கி அவற்றில் லேபல் ஒட்டும் பணி ஆரம்பிக்கப்பட உள்ளது.
இது தொடர்பில் நாடு முழுவதும் உள்ள சகல கிராமசேவகர்களுக்கும் விசேட பயிற்சி வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதி வரை லேபல்கள் ஒட்ட இருப்பதாக பணிப்பாளர் தெரிவித்தார்.
சனத்தொகை கணிப்பீடு முடிவ டையும் வரை வீடுகளில் ஒட்டப்படும் ‘லேபல்’களை அகற்ற வேண்டாம் என புள்ளிவிபரவியல் திணை க்களம் பொதுமக்களிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது. இதேவேளை, குடிசன மதிப்பீடு 65 ஆயிரம் அலகுகளாக பிரித்து முன்னெடுக்கப்பட உள்ளது. ஒவ் வொரு அலகிற்கும் ஒருவர் வீதம் 65 ஆயிரம் பேர் தொண்டர் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த வருட நடுப்பகுதியில் நியமிக்கப்படும் தொண்டர்களுக்கு பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கில் சில பகுதிகளில் மீள்குடியேற்றப் பணிகள் நிறைவடையாத போதும் அது சனத்தொகை மதிப்பீட்டுக்கு தடையல்ல எனவும் புள்ளி விபரவியல் திணைக்களம் கூறியது. இடம்பெயர்ந்த மக்கள் அவர்கள் தங்கியுள்ள முகாம்களில் வைத்து கணிப்பிடப்பட உள்ளனர்
»»  (மேலும்)

யெமனில் வெடிமருந்து தொழிற்சாலை வெடித்து 121 பேர் பலி

யெமனில் வெடி மருந்து தொழிற்சாலை ஒன்று வெடித்து சிதறியதில் 121 பேர் பலியாகினர்.
யெமனில் உள்ள ஏபியான் மாகாணத்தில் வெடி மருந்துத் தொழிற்சாலை ஒன்று உள்ளது. அருகில் உள்ள ஜார் நகரில் சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்துவதற்காக இங்கு வெடி மருந்து தயாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த ஆலைக்குள் அதிரடியாக புகுந்து அதனைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட அமைப்பு அல்கொய்தா தாங்கள் எடுத்துக் கொண்டது போக மீதமான வெடி மருந்தை அப்படியே விட்டு விட்டு சென்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் நேற்று அதில் நுழைந்து வெடிமருந்தை அள்ளிச் சென்றனர்.
இந்நிலையில் அந்த வெடிமருந்து ஆலை திடீரென வெடித்து சிதறியது. இதில் சுற்றுப்புற பகுதிகளில் வசித்த பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 121 பேர் கொல்லப்பட்டதாகவும் 45 பேர் காயமடைந்ததாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து இந்த தொழிற்சாலையின் நிர்வாகி மொஹிம் சலீம் கூறுகையில், ஏற்கனவே அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் அல் கொய்தாவினர்தான் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றார்.
சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர் கருகிப் போன உடல்களை மீட்டனர். மேலும் நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
»»  (மேலும்)

கடாபியில்லாத லிபியாவை கட்டியெழுப்ப லண்டனில் மாநாடு * 07 அரபு நாடுகள் உட்பட 35 நாடுகள் பங்கேற்பு; * அகதிகளைத் தடுக்க இத்தாலியில் மனிதச் சங்கிலி

லிபியாவுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளை நேட்டோ பொறுப்பேற்றதையடுத்து ஆகாயம், தரைமார்க்கமான தாக்குதல்களில் அமெரிக்கப் படைகள் இறங்கியுள்ளன. முஅம்மர் கடாபியை ஆட்சியிலிருந்து அகற்றிய பின்னர் எவ்வகையான வேலைகளை முன்னெடுப்பது என்பதை ஆராயும் கூட்டம் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
இதில் 35 நாடுகள் பங்கேற்றன. கடாபியில்லாத லிபியாவை ஜனநாயக ரீதியாக கட்டியெழுப்புவது அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, பொதுமக்கள் பாதுகாப்பு உட்கட்டமைப்புகளை புனரமைத்தல் போன்ற விடயங்களே இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன. இதில் ஏழு அரபு நாடுகளும் பங்கேற்றன.
லண்டன் மாநாடு லிபியாவில் அரசியல் அதிகாரங்களை பரவலாக்க உதவும் என நம்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஸி குறிப்பிட்டார். முஅம்மர் கடாபிக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க இராணுவம் தீவிரமாக்கும் போது ஈராக்கில் இடம்பெற்றவை போன்ற பாரிய அழிவுகள் இடம்பெறலாம். குறிப்பாக அமெரிக்க விமானங்களின் குண்டுத் தாக்குதல்களால் பெருமளவான உயிரிழப்புகள் ஏற்படலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறினார்.
இவ்வாறு உள்ள நிலையில் முஅம்மர் கடாபியின் மகன் கிளர்ச்சியாளர்கள் அமைப்புடன் இணைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதை இதுவரை ஊர்ஜிதம் செய்ய முடியாதுள்ளது. ஜனநாயகத்தை நோக்கி வீறு நடை போடுமாறு கிளர்ச்சியாளர்களை லண்டனில் கூடிய மாநாடு கேட்டுக்கொண்டது. லிபியாவிலிருந்து தப்பி ஓடி வரும் அதிகமானோர் இத்தாலிக்குள் நுழைவதால் அந்நாட்டு அரசாங்கம் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. லிபிய அகதிகள் இத்தாலிக்குள் நுழைவதை தடுக்க இத்தாலியர்கள் எல்லையில் மனிதச் சங்கிலிகளாக ஒன்றிணைந்து நின்றனர்.

»»  (மேலும்)

3/29/2011

லிபியா மீதான தாக்குதலை ஐநா அங்கீகரிக்கவில்லை: ரஷ்யா

மாஸ்கோ, மார்ச் 28- லிபியாவில் அதிபர் கடாஃபி படையினர் மீதான நேட்டோ படைகளின் விமானத் தாக்குதலுக்கு ஐநா அங்கீகாரம் வழங்கவில்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"லிபியாவின் அதிபர் கடாஃபி படையினர் மீதான தாக்குதல் அந்நாட்டின் உள்நாட்டுப் போரில் நேட்டோ தலையிடுவதாக உள்ளது. அந்நாட்டின் பொதுமக்களை பாதுகாப்பதற்கு தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது நேட்டோ படைகளின் விமானத் தாக்குதல்கள் ஐநாவின் தீர்மானத்துக்கு விரோதமாக உள்ளது. லிபியா மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் நேட்டோ படைகள் ஒரு வரைமுறையுடன் செயல்பட வேண்டும்." என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.

அதிபர் கடாஃபி படையினருக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடர்பான தீர்மானம் ஐநாவில் கொண்டு வரப்பட்டபோது, ரஷ்யாவும் சீனாவும் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

கடாபி பிறந்தகமான ~சிர்த்' மீது கூட்டுப்படை விமானத் தாக்குதல் முக்கிய நகரங்கள் கிளர்ச்சிப் படை வசம்

லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் பிறந்தகமான சிர்த்தின் மீது கூட்டுப்படை நேற்று வான்வழி தாக்குதல்களை நடத்தியது.
அத்துடன் தலைநகரான திரிபோலி யிலும் கூட்டுப்படை வான் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது. திரிபோலியில் பல்வேறு இடங்களிலும் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக அங்கிருக்கும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன.
லிபியா மீதான தாக்குதலின் முழு கட்டுப்பாட்டையும் நேட்டோ பொறுப் பேற்றதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் குறித்து லிபிய செய்தித் தொடர்பாளர் மெளஸா இப்ராஹிம் கூறுகையில், நகரின் மீன்பிடி துறைமுகப் பகுதியில் நடைபெற்ற கூட்டுப்படை தாக்குதலில் 3 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தப்பட்ட அந்தப் பகுதியில் எந்த இராணுவ செயல்பாடுகளும் இருக்க வில்லை. தலைநகர் திரிபோலியில் கூட்டுப்படையினர் தாக்குதல்களை நடத்தினர் என்றார்.
அத்துடன் கடந்து ஒருவார காலமாக கூட்டுப்படை லிபியா மீது நடத்தும் தாக்குதலால் இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக லிபிய அரசு அறிவித்துள்ளது. எனினும் இந்த தகவலை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை லிபியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சிர்த்தையும் கைப்பற்றியதாக கிளர்ச்சிப்படை நேற்று அறிவித்தது. கிளர்ச்சிப்படை நேற்று அதிகாலை 1.30 க்கு சிர்த்துக்குள் நுழைந்ததாகவும் அந்த பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் எதிர்க் கட்சிகளின் தேசிய கெளன்சில் பேச்சாளர் ஷம்ஸ் அப்துல் டிலா கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர் களின் தலைமையகமான பெங்காசியில் துப்பாக்கிகளை வனத்தை நோக்கி சுட்டு கிளர்ச்சியாளர்கள் தமது வெற்றியை கொண்டாடியதாக அங்கிருக்கும் அல் ஜkரா செய்தியாளர் கூறியுள்ளார்.
எனினும் சிர்த் பகுதியில் கடாபி ஆதரவுப்படை தொடர்ந்து நிலைகொண் டுள்ளதாக ராய்ட்டர் செய்திச் சேவை கூறியுள்ளது.
ஏற்கனவே லிபியாவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஐந்து முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி யுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜ்தபியா, பிரேகா, ராஸ் லனூப் உகைலா, பின் ஜவாத் ஆகிய நகரங்களில் இருந்து கடாபி ஆதரவுப் படைகள் விரட்டியடிக்கப்பட்டிருப்பதாக கிளர்ச்சியாளர் கள் தெரிவித்தனர்.
அந்தப் பகுதிகளில் குவிந்த கடாபியின் எதிர்ப்பாளர்கள், துப்பாக்கியால் வான த்தை சுட்டு தங்கள் வெற்றியைக் கொண்டாடினர்.
லிபிய இராணுவத்தின் மூத்த தளபதி ஜெனரல் பில்காஸிம் உட்பட ஏராளமான இராணுவ வீரர்களை, கிளர்ச்சியாளர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தி ருப்பதாகவும் அல்-ஜkரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து விளக்க மளித்துள்ள லிபிய அரசின் செய்தித் தொடர்பாளர், அமெரிக்க கூட்டுப்படை யினரின் தாக்குதலில் பொதுமக்களின் உயிரிழப் பைத் தடுக்க சில நகரங்க ளில் படைகள் வாபஸ் பெறப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மிஸ்ராட்டா நகரில் சந்தேகப்படும் நபர்களை கடாபி படை யினர் சுட்டுக் கொல்வதாக உள்ளூர் வாசிகளை மேற்கோள் காட்டி அல்-ஜkரா செய்தி வெளியிட் டது. உயரமான கட்ட டங்களில் நிறுத்தப்பட்டி ருக்கும் இராணுவ வீரர்கள் சாலைகளில் செல்லும் மக்களை சுட்டு வீழ்த்துவ தாக அல்-ஜkரா ஒளிபரப் பில் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
லிபியா இராணுவ முகாம்கள் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பிரான்ஸ் படைகள் நடத்திய தாக்குதலில் லிபிய இரா ணுவத்தின் 5 போர் விமானங்கள் 2 ஹெலிகொப்டர்கள் முழுவதும் சேதமடைந் தன. பிரிட்டிஷ் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 இராணுவ டாங்கிகள் உடைத்து நொறுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தலைநகர் திரிபோலி மட்டும்தான் அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. ஏனைய பல பகுதிகளிலும் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வருவதோடு கடாபி ஆதரவுப் படையினர் முன்னகர விடாமல் கூட்டுப் படையினர் வான்வழியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதேவேளை இராணுவத்தை பயன்படுத்தி லிபியா ஆட்சியாளர் முஅம்மர் கடாபியை கொல்லும் திட்டம் இல்லை. அவருக்கு எதிரான போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செனட் சபையில் லிபியா மீதான தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு ஜனாதிபதி ஒபாமா பதில் அளித்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் “லிபியாவின் வான் பகுதி நேட்டோ நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
1973 ஆம் ஆண்டின் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி லிபிய மக்களின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் நேட்டோ அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும். இராணுவத்தை பயன்படுத்தி லிபியா ஆட்சியாளர் கடாபியை கொல்லும் திட்டம் எதுவும் இல்லை. ஆட்சியை மாற்றும் திட்டம் தான் உள்ளது” என ஒபாமா தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி ஒபாமா, “லிபியா ஆட்சியாளருக்கு எதிரான எங்களது போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். பெங்காசியில் கடாபியின் படை பின்வாங்கியுள்ளது. லிபியாவுக்குள் இராணுவப் படையை நாங்கள் பயன்படுத்தவில்லை.
எங்களுடன் இணைந்து விமான தாக்குதலில் அரபு நாடுகளான கட்டார் மற்றும் யு.ஏ.ஈ. ஈடுபட்டுள்ளன. லிபியா மீதான தாக்குதல் பொறுப்பு இந்த வார ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவிடம் இருந்து நேட்டோ அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. கடாபியின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. லிபியா மக்களின் பயன்பாட்டிற்கு இது உதவும்.
கடாபியின் படைகள் பின் வாங்கி மனிதாபிமான உதவிகளுக்கு வழி விட வேண்டும். வன்முறையில் ஈடுபடுபவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பர். கடாபி ரத்தத்தில் குளிக்கப் போவதாக மிரட்டுகிறார். இது அந்த மண்டலம் முழுவதையும் பாதிக்கும். இதை தடுக்க சர்வதேச சமுதாயம் முன்வரும் போது நாங்களும் பங்கேற்க வேண்டும். அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எங்களுடைய கடமை” என்றார்.
இதுகுறித்து பென்டகன் அதிகாரி பில் கோர்ட்னி கூறுகையில், “லிபியாவில் தொடர்ந்து கடாபியின் ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது விமானப் படை விமானங்கள் வானில் பறக்க முடியாது. போர் கப்பல்கள் துறை முகத்தில் நிற்கின்றன. ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டன. தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழக்கப்பட்டன.
ஆனாலும், நிலத்தில் இருந்து இயக்கப் படும் பீரங்கிகள் மூலம் விமானத்தை நோக்கி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது இன்னும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. திரிபோலி, செபாவில் நேட்டோ படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தின. பெங்காசி நகரம் கிளர்ச்சியாளர் களின் கையில் உள்ளது. அஜ்தாபியாவில் தொடர்நது தாக்குதல் நடந்து வருகிறது. இதேபோல் மிசுரட்டா, ஜிந்தன் ஆகிய இடங்களில் அப்பாவி மக்கள் மீது கடாபியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்றார்.
இதேவேளை தம்மை கற்பழித்ததாக லிபிய பெண் ஒருவர் செய்த முறைப் பாட்டை அடுத்து கடாபி ஆதரவுப் படையின் இருவர் கைது செய்யப்பட்டனர். அரச இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தம்மை கற்பழித்து கொடுமை செய்ததாக இந்த பெண் முறையிட்டுள்ளார். இது குறித்து திரிபோலியில் உள்ள ரெக்சோன் ஹோட்டலில் மேற்படி பெண் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்க இருந்தார். எனினும் அந்த பெண் அரசு சார்பானவர்களால் தடுக்கப்பட்டா
»»  (மேலும்)

3/28/2011

மட்டக்களப்பில் நபர் ஒருவரால் சிறுமி பாலியல் வல்லுறவு _

  மட்டக்களப்பு வாழைச்சேனைப் பூலாக்காடு பிரதேசத்தில் நபரொருவர் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம்மொன்று இடம்பெற்றுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் வயோதிபர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சிறுமியின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
»»  (மேலும்)

சகோதரப் படுகொலையின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்படும் – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர்.


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து உயிர் நீத்த மாவீரர்களது உறவினர்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது கட்சிப் பணிமனையில் சந்தித்து உரையாடி உள்ளார்.கிழக்கு மாகாணத்தின் விடுதலைக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உருவாக்கத்திற்காகவும்  தங்களது உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூறவேண்டும் என்ற நோக்கின் அடிப்படையில் அவர்கள் உயிர் நீத்த நினைவு நாளை ஏப்ரல் 10ம் திகதி அனுட்டிப்பதாகவும் தெரிவித்தார்.

»»  (மேலும்)

விவசாய நீர்பாசன அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம்

விவசாய மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இன்று (27.03.2011) மட்டக்களப்பிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். கடந்த வெள்ள அணர்த்தத்தின் போது தூர்ந்து போன குளங்கள், மற்றும் விவசாயப் பாதைகள் புணரமைப்பு, அத்தோடு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பாக ஆராய்வதே நோக்கமாகும். இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)

3/27/2011

லியோனியின் பட்டிமன்றத்திற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர்.

மக்களை பரவச படுத்தி வரும் இந்தியாவில் மாத்திரமின்றி உலகம் முழுவதிலும் நகைச்சுவையில் மா மன்னராக திகழ்கின்ற திண்டுக்கல் ஐ லியோனி கலந்து சிறப்பித்த பட்டி மண்ற நிகழ்வு மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொது விளையாட்டரங்கு மைதானத்தில் இன்று (26.03.2011) இரவு இடம் பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்த கொண்டார். இச் சிறப்பு பட்டி மண்றத்தின் பேச்சாளராக பேராசிரியர் சுப்பையா, இலங்கைக்கு வருகை தந்து நாட்டின் பல பாகங்களிலும் நகைச்சுவை ஊடாக பேராசிரியர் நவஜோதி, இனியவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
»»  (மேலும்)

கல்லடி கடற்கரை சிரமதானம்.

  கல்;லடி கடற்கரையில் இன்று ( 26.03.2011) முற்று முழுதாக துப்பரவு செய்யப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை துப்பரவு செய்தல் எனும் செயற்திட்டத்தின் கீழ், நாடு பூராகவும் மேற்கொள்ளப்படுகின்றது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாடெங்கிலும் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேற்படி சிரமதான நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.

»»  (மேலும்)

புகலிடத்து கிழக்கு மாகாண மக்கக்களிடையே முன்னுதாரணமாக திகழும் "முனைப்பு "

View 26.3_muna...jpg in slide showView 26.3_muna...jpg in slide show

சுவிஸ் முனைப்பு நிறுவனத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளதாக முனைப்பு நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறுமைக்கோட்டின்  கீழ் வாழும் 23 மாணவர்களுக்கு சனிக்கிழமை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் வைத்து முனைப்பின் தலைவர் கு.அருணாசலம் தலைமையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்பட்டுள்ள இம்மாணவர்கள் தங்கள் பல்கழைக்கழக படிப்பை முடிக்கும் வரையில்  மாதாந்தம் புலமைப்ப்பரிசிலை பெறமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வருடத்துக்கான இத்திட்டத்தில் திருமலை,மட்டக்களப்பு,அம்பாறைமாவட்டங்களைச்சேர்ந்த தமிழ் ,முஸ்லிம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் நாளடைவில் ஏனைய மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது.
முனைப்பு நிறுவனம் கடந்த ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு ஏற்கனவே புலமைப்பரிசில்களை வழங்கிவருகின்றது. இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் சிந்தனையில் இயங்கிவரும் முனைப்பு நிறுவனம் கிழக்கில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித்தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில்  ஏற்கனவே உணவுப்பொருட்கள்பால்மாமருந்துப்பொருட்கள் உட்பட பல்வேறு அத்தியாவசியப்பொருட்களை வழங்கி வைத்ததுடன், மாணவர்வளமேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் ரூபா செலவில் தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்  வழங்கிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்
»»  (மேலும்)

யாழ்ப்பாண இசை விழா _

கலாசார ரீதியான நாட்டுப்புற கலை வடிவங்களின் கொண்டாட்டமான யாழ்ப்பாண இசை விழா 2011 நிகழ்வு நேற்று காலை யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் ஆரம்பமாகி இன்றும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

நோர்வே நாட்டின் அனுசரணையுடன் நடைபெறும் இந் நிகழ்ச்சியை நேற்று தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மூன்று தினங்கள் யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விழாவின் மூலமாக அனைத்து இனங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் நாடு முழுவதிலுமுள்ள கலாசார ரீதியான நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

தூய நாட்டுப்புறக் கலை, மருவிய நாட்டுப்புறக் கலை மற்றும் கலாசார இசை என்பன ஒன்றிணைந்த வகையில் இந்த விழா நடைபெறுகின்றது.

இவ்விழாவில் இலங்கையிலிருந்து 23 உள்நாட்டுக் குழுக்களும், இந்தியா, நேபாளம், பாலஸ்தீனம், தென் ஆபிரிக்கா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5 சர்வதேச நாட்டுப்புறக் குழுக்களும் கலந்து கொண்டுள்ளன.
»»  (மேலும்)

3/26/2011

முஸ்லிம் சமூகத்துக்கும் அரசியல் தீர்வு அவசியம்: ஆடு நனைகிறது என்று ஓநாயாக அழும் மாவை சேனாதிராசா

தமிழ் சமூகத்தைப் போன்றே முஸ்லிம்களுக்கும் அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும் முஸ்லிம்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதுடன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது அதனை வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களின் சுயாட்சி என்ற கோட்பாடு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலும் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், அதற்கு முன்பும் தந்தை செல்வநாயகத்தினால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களும் தமிழர்களைப் போன்றே மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், தமிழ்மக்கள் முஸ்லிம்களுடன் இணைந்து வாழத் தயாராக இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  மக்கள் அமைதியாக வாழுவது குழப்பவாதிகளுக்கு எப்போதுமே பிடிப்பதில்லை இனங்களை கூறு போட்டு அரசியலில் குளிர் காய்வதில் ஐம்பது வருடங்களை ஒட்டிவிட்ட இனவாதிகளுக்கு மக்களை கூறு போட்டு தமிழன்  சிங்களவன்  முஸ்லிம் என்ற கோசங்களை விட்டால் பேசுவதற்கு வேறு எதுவும் கிடைப்பதில்லை இந்த கிழட்டு புலி மாவை இன்று முஸ்லிம்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்  புலிகள் முஸ்லிம்களை படாதபாடு படுத்திய போதெல்லாம் வாய் மூடி கள்ள மௌனம் காத்தவர்கள் இவர்கள். ஒரு லட்சம் முஸ்லிம்களை புலிகள் ஆடு மாடுகளை துரத்துவதுபோல் துரத்தியடித்த போது ஒரு வார்த்தை பேசாத இந்த மாவை, பள்ளிவாசல் படுகொலைகளால் இரத்தாறு ஓடிய போதெல்லாம் பொத்திய வாய் திறக்காத இந்த மாவை இப்போது முஸ்லிம்களுக்கு சுயாட்சி கேக்கின்றார் . 
 முஸ்லிம்களுக்கு என்ன வேண்டும் என்பதை முஸ்லிம்கள் தீர்மானிப்பார்கள். முஸ்லிம்கள் சுயாட்சி கேட்டகாலத்தில் தனித்தரப்பு கேட்டகாலத்தில்  அவர்களை துரோகி என்பதும், நாங்கள் போராடி உங்களுக்கு உரிமையா?  என்று நியாயம் பேசிய இவர்கள், பு லிகளே எல்லாருக்கும் ஏகபிரதிநிதிகள் என்று  தற்குறி பிரபாகரனிடம் தஞ்சம் அடைந்த தரித்திரம் பிடித்த இந்த கூட்டம், புலிகளின் மேடைகளில் அவர்களுக்கு துதி பாடி  திரிந்த  மாவை போன்றோர் இன்று முஸ்லிம் களுக்காக அழுவதன் உள்நோக்கம் வேறு. கிழக்கு வடக்கு மாகாணங்களில் முஸ்லிம் ,தமிழ் ,ஏன் சிங்களவர் என்ற வேறு பாடு ஏதுமின்றி மக்கள் ஒன்றாக வாழ தலைப்பட்டு விட்டனர். கிழக்கு மாகாணத்தில்  தனி அலகு, சுயாட்சி கேட்ட முஸ்லிம்கள் இப்போது தமிழர்களுடன் இணைந்து கிழக்கு மாகாணசபையை கூட்டாக ஆளுகின்றனர்.
 இந்த தமிழ் தேசிய வாதிகள் யாருமே எதிர்பாக்காத இன ஒற்றுமை கிழக்கில் ஏற்பட்டு விட்டது சிங்களவனை காட்டி  காட்டி  ஒரு புறம் முஸ்லிம்களை காட்டி காட்டி மறுபுறமுமாக தமிழர்களை தனியே பிரித்தெடுப்பதே இப்போது மாவை போன்றவர்களின் தேவை .அதற்காகவே முஸ்லிம்களை சுயாட்சி ஆசை காட்டி உசுப்பி விட முனைகின்றார்கள். இதுபோன்ற கருத்துகளிற்கு எதிராக முஸ்லிம் தலைமைகள் கடுமையான கண்டனங்களை தெரிவிக்க  வேண்டும். இனஉணர்வுகளை கிளறி அரசியல் பண்ண மீண்டும் முனைகின்ற தமிழ் இனவாதிகளையிட்டு அனைவரும் விழிப்படைய வேண்டும் .தமிழ் மக்களுக்கு சரியான வழிகாட்ட வக்கில்லாத இந்தகூட்டமைப்பு மந்தைகள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பார்களாம் இந்த போக்கிரிகளை நிராகரிக்க எமது மக்கள் தயாராகாத வரை இலங்கைக்கு விமோசனமே கிடையாது                                                           
»»  (மேலும்)

3/24/2011

யு.எஸ்.எயிட் அமைப்பின் பிரதிநிதிகள் இன்று (23.03.2011) கிழக்கு மாகாண முதலமைச்சரை அவரது திருகோணமலை அலுவலகத்தில் சந்தித்து உரையாடினர்.








யு.எஸ்.எயிட் அமைப்பின் பிரதிநிதிகள் இன்று (23.03.2011) கிழக்கு மாகாண முதலமைச்சரை அவரது திருகோணமலை  அலுவலகத்தில் சந்தித்து உரையாடினர். (படங்கபள் இணைப்பு) மேற்படி கலந்துரையாடலில்,
சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பாகவும் சிறு முயற்சியாளர்களின் தொழில் துறைகளை ஊக்குவிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்தில் முதலமைச்சரால் மேற்கொள்ளப்படும் சுற்றுலாத்துறை தொடர்பான அபிவிவிருத்தி நடவடிக்கைகளில் இணைந்து செயற்படுவதாகவும் அவர்கள் வாக்குறுதி அளித்தனர்
»»  (மேலும்)

இறைமை, சுதந்திரம், மக்கள் அபிலாஷை, ஜனநாயக உரிமைகள் லிபியாவை பாதுகாக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை ஆதரவு

லிபியாவின் இறைமை, சுதந்திரம், ஜனநாயக உரிமைகள், மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை அரசு பூரண ஆதரவை வழங்குமென அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

லிபியா மீதான தாக்குதல்களை ஏற்க முடியாது
- ஜP.எல்.பீரிஸ்

மேற்குலக தலையீடு அரபு, முஸ்லிம் உலகுக்கு அச்சுறுத்தல்
- ஏ.எச்.எம்.அஸ்வர்

லிபியா மீது நடத்தப்படும் வான் தாக்குதல்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வான் தாக்குதல்கள் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. இராஜதந்திர ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதையே இலங்கை அரசு விரும்புகிறது என வெளிவிவகார அ
மைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
லிபியா மீது மேற்குலக நாடுகள் நடத்தும் தாக்குதல்களை கண்டித்து நேற்று பாராளுமன்றத்தில் ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணையொன்றை சமர்ப்பித்துப் பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கைக்கும் லிபியாவுக்கும் இடையே நீண்ட காலம் நெருக்க மான உறவுகள் இருக்கின்றன. இதன் காரணமாகவே அங்கு நடத்தப்படுகின்ற தாக்குதல்களை கண்டித்தும் அந்த மக்களுக்கு ஆதரவாகவும் இன்று ஒன்றுகூடி இருக்கின்றோம்.
எந்தவொரு நாட்டிலும் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது. அவர்கள் பாதிக்கப்படும் போது அதற்கு தலையிடும் விதத்தில்தான் ஐ. நா. பாதுகாப்பு சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், ஐ.நா.வின் இந்த கொள்கைக்கு ஏற்றவாறுதான் லிபியாவில் நடை பெறுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேற்குலக நாடுகள் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை களை மதிக்காமல் இந்த தாக்குதல்களை மேற்கொள்கின்றன. லிபியா மீது நடத்தப்படும் வான் தாக்குதல்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வான் தாக்குதல்கள் தீர்வாக அமையாது.
லிபியாவின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான பேச்சு நடத்த முடியுமாக இருந்தது. எனினும் இந்த நாடுகள் இவற்றில் ஆர்வம் காட்டவில்லை. ஐ. நா. செயலாளர் நாயகம் ஒரு பிரதிநிதியையும் லிபியாவுக்கு அனுப்பி இருந்தார்.
முன்னதாக ஒத்திவைப்பு பிரேரணையை சமர்ப்பித்து பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் உரையாற்றினார். அவர் கூறியதாவது,
லிபியா மீது மேற்கொள்ளப் படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதற்கும் லிபியாவின் எதிர்கால நடவடிக்கைகளை அவர்களே தீர்மானிப்பதற்கான லிபிய ஜமாஹிரிய மக்களின் கெளரவத்தையும், கண்ணியத் தையும் சுய விருப்பத்தையும் அங்கீ கரிப்பதற்கு எல்லா அரசாங்கங்களும் எல்லா மக்களும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
அவர் மேலும் குறியதாவது, தற்போது லிபிய ஜமாஹிரிய்யா மீது மேற்கொள்ளப்படும் இராணுவத் தாக்குதல் உலகெங்கிலும் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்குலகக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்படும் கண்மூடித்தனமான குண்டுவீச்சுகள் ஏற்கனவே மனித உயிர்களின் இழப்பையும் வணக்க தலங்கள் மற்றும் ஏனைய கட்டடங்களுக்கு அழிவையும் ஏற்படுத்தியுள்ளன.
லிபியாவில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகளின் இராணுவத் தலையீடு பாரிய அமளியை ஏற்படுத்தியுள்ளது. இது ஐ.நா. சாசனத்தை அப்பட்டமாக மீறும் ஒரு செயலாகும். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்களின் மரணத்துக்குப் பொறுப்பான இந்த நாடுகளில் சில பலஸ்தீனிய மக்கள் மீதான அட்டூழியங்களும் புரிகின்றன.
அப்பாவிப் பலஸ்தீனியர்களை இஸ்ரேலியர்கள் படுகொலை செய்வதை இவர்கள் கண்டு களிக்கின்றனர். லிபியாவின் எண்ணெய் வளத்தைப் பெறுவதற்காகவும் அந்தப் பிராந்தியத்தில் பலமான இராணுவ பிரசன்னத்தை ஏற்படுத்துவதற்கும் லிபியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இராணுவத் தலையீடு எதிர்காலத்தில் அரபு மற்றும் முஸ்லிம் உலகுக்கு ஓர் அச்சுறுத்தலாக அமையும் என சர்வதேச ஊடகங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன.
வேண்டுமென்றே மேற்கொள் ளப்படும் இந்த மனித உரிமை மீறல் மற்றும் ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை பற்றிய ஐக்கிய நாடுகள் சாசனத்தை மீறுதல் ஆகியவை சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியை பாரிய சங்கடத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
எனவே, லிபியா மீது மேற்குலகக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்துவதற்கும் தமது எதிர்கால நடவடிக்கைகளை தாங்களே தீர்மானிப்பதற்கான லிபிய ஜமாஹிரிய மக்களின் கெளரவத்தையும் கண்ணியத்தையும் சுய விருப்பத்தையும் அங்கீகரிப்பதற்கும் குரல் கொடுக்க வேண்டும் என எல்லா மக்களையும் அரசாங்கங்களையும் இந்தப் பாராளுமன்றம் வேண்டுகின்றது.
லிபியாவிலுள்ள எண்ணெய் வளத்தை சூறையாடும் நோக்கத்துடன் தான் இந்த தாக்குதல்களை மேற்குலக நாடுகள் நடத்துகின்றன. லிபியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கரிசனை ஏன் அவர்களுக்கு வந்தது.
மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் இன்று எமது ஜனாதிபதியின் நண்பர்களாக உள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையின் தாற்பரியமே மத்திய கிழக்கு நாடுகள் நண்பர்களாக ஆவதற்கு பிரதான காரணமாகவும் எமது ஜனாதிபதியுடன் நண்பர்களாக இருக்கும் எவரையும் ஐ. தே. கவுக்கு பிடிக்காது. லிபியத் தலைவரையும் ஐ. தே. க எம்.பி. ரவி கருணாநாயக்க விமர்சித்தார்.
சுய மரியாதையுடன் ஆட்சி மாற்றத்தை அந்த மக்களே தீர்மானிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். இதில் மேற்குலக நாடுகள் தலையிட்டு தாக்குதல்களை நடத்த தேவையில்லை. பல ஊடக அமைப்புகள் லிபியா மீதான தாக்குதலை கண்டித்துள்ளன. ஆஸ்பத்திரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்குச் சார்பான ஆட்சியை கொண்டுவரவே முயற்சி நடக்கிறது. உலமா சபையும் லிபியா மீதான தாக்குதல் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலக சமாதானத்திற்கு நாம் பிரார்த்திக்க வேண்டும். குர்ஆனில் இறைவன் கூறுகிறான். இறைவன் தவறு செய்பவர்களை தண்டிப்பான். பலம்வாய்ந்த நாடுகளுக்கும் இந்த நிலை ஏற்படும்.
லிபியா நீண்டகாலமாக இலங்கையுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளது. அந்த நாடு தொடர்ந்து உதவி வருகிறது- லிபியா மீது மேற்கொள்ளப்படும் அநீதிக்கு எதிராக அனைவரும் எழுந்துநிற்க வேண்டும்.
பயங்கரவாதத்தை தோற்கடித்து எமது நாடு முழு உலகிற்கும் முன்மாதிரியாக செயற்பட்டது. லிபியா மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
»»  (மேலும்)

3/23/2011

கொலைக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆசாமி யோகேஸ்வரனின் புதிய பிரச்சராம்


   

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குழந்தப் பிள்ளைகளைப் போன்று சுட்டித்தனமான புகார்களை வழங்கி வருகின்றார். கடந்த 20ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் தனக்கு கையால் சுடுவேன் என சைகை செய்ததாக காத்தான்குடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். இதனைப் பார்க்க வேடிக்கையாக இல்லையா? ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் போய் பொலிசில் கொடுத்திருக்கிற முறைப்பாட்டைப் பாருங்கள். நான் நினைக்கிறேன் தான் ஒரு பூசாரி என்ற காரணத்தால் அவர் பேய் பிடித்தவர்களுக்கு மந்திரம் சொல்லி சாட்டைகயிறால் அடிப்பார். அந்தப் பேய்கள் மாறி இவரில் பிடித்துக் கொண்டுள்ளது போல.இப்படியெல்லாம் அனுதாபம் தேடுவதைவிட … எடுக்கலாம்
»»  (மேலும்)