2/05/2011

பதவியை உடன் இராஜpனாமா செய்ய தயார்

ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறும் தினத்தை எதிர்பார்த்து பல்லாயிரக் கணக்கான எகிப்திய மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்த தங்களை தயார்படுத்திக்கொண்டிருக் கிறார்கள்.
அரசாங்கத்திற்கு எதிராக எகிப்தில் மக்கள் பல்லாயிரக் கணக்கில் வீதியில் இறங்கி கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறியதையடுத்து, குறைந்தபட்சம் 300 பேர் அங்கு மரணமடைந்துள்ளனர்.

பதவி விலகுமாறு 5 நாடுகள் கோரிக்கை

எகிப்து நாட்டில் உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை என ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தியுள்ளன. இது குறித்து ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஒன்றாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எகிப்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டனத்துக்குரியது. எகிப்து நாட்டு மக்கள் அமைதியான முறையில் பாராளுமன்றத்தை நடத்தும் சூழல் ஏற்பட வேண்டும். பாதுகாப்பு படையினரின் முழு ஒத்துழைப்பு அவர்களுக்கு தேவை. எகிப்தில் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. எனவே அங்கு உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை. இதன் மூலம்தான் தற்போது அங்கு நிலவும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். எகிப்தில் வன்முறையை தூண்டுவோரின் செயலும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு ஐரோப்பிய நாடுகள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை ஏ.பி.சி. தொலைக்காட்சி சேவைக்கு ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், எகிப்தில் தமக்கெதிரான வன்முறைகள் ஆரம்பமாகியதையடுத்து கொடுத்த முதலாவது பேட்டியில், தமக்கு அதிகாரத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டு இருக்கின்றது என்றும், தாம் உடனடியாக ஜனாதிபதி பதவியை இராஜிமானா செய்ய தயாராக இருப்பதாகவும் அறிவித்துள் ளார். எனினும் தமக்கு பின் எகிப்தின் ஆட்சி குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
முபாரக் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியிருப்பது குறித்து கருத்து கேட்டதற்கு, எகிப்து பண்பாடு பற்றி உங்களுக்கு (ஒபாமா) ஒன்றும் புரியாது. நான் பதவியில் இருந்து இறங்கினால் என்ன நடக்கும் தெரியுமா? என்று கேட்டுள்ளார்.
உலக நாடுகள் பல இப்பொழுது ஒஸ்னி முபாரக் ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்ற அழுத்தங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளனர். எகிப்தின் நேச நாடான அமெரிக்க அரசாங்கம் கூட எகிப்தில் உடனடியாக அதிகாரம் கைமாற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேற தயக்கம் காட்டினால், தாங்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடப் போவதாக மக்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் சாதாரண உடையணிந்த நூற்றுக்கணக்கான பொலிஸாரும் கலந்து கொண்டதாக அறிவிக்கப்படு கிறது. இதைவேளையில் எகிப்தின் உப ஜனாதிபதியாக சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட அந்நாட்டின் புலனாய்வு துறையின் முன்னாள் தலைவர் ஒமார் சுலைமான் ஜனாதிபதி முபாரக் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என உறுதியளித்திருப்பதால் மக்கள் அமைதியாக இருந்து வன்முறைகளை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.
மக்களின் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட ங்கள் நியாயமானது என்று தெரிவித்துள்ள எகிப்திய இராணுவம், பொது இடங்களில் எதிரணிக் குழுக்கள் பரஸ்பர தாக்குதல்கள் நடத்துவதை தடுத்து வரும் பணியை மேற்கொண்டு வருகிறது. மக்களின் வன்முறைகள் சமீபத்தில் ஏற்படும் வரை எகிப்திய இராணுவம் ஹொஸ்னி முபாரக்கிற்கு விசுவாசமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment