ஏறத்தாழ இரண்டரை இலட்சம் பேரைக் கொள்ளக்கூடிய தாகிர் சதுக்கம் 3 வது முறையாக எகிப்திய அரசுக்கெதிரான போராட்டக்காரர்களால் கடந்த செவ்வாயன்று நிறைந்து காணப்பட்டது.
எகிப்தில் கைது செய்யப்பட்டிருந்த கூகிள் நிறுவன அதிகாரி இணையத்தில் வெளியிட்ட கண்ணீர் மடலும் பெருந்திரளானோர் கூடியதற்கு ஒரு காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டு 12 நாட்களின் பின் விடுவிக்கப்பட்ட கூகிள் நிறுவன அதிகாரி வேல் கோனின் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு மத்தியில் உரையாற்றி அவர்களை உற்சாகப்படுத்தினார்.
“நீங்கள் தான் வீரர்கள்; நானல்ல” என்று கூறிய அவர், தான் கண்கள் கட்டப்பட்ட நிலையில் 12 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறினார்.
பேஸ்புக் குழுமமொன்றின் பின்னணியில் கோனினும் இருந்ததாகவும் இவ்வாறு அலையலையாக மக்கள் கூட்டம் திரளக் குழுமமே காரணமாக அமைந்ததாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இந்த போராட்டத்தில் உயிர் நீத்த 300 பேருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் கோனின் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக் காரரையும் ஊடகவியலாளர்களையும் விடுவிக்கவேண்டுமென அமெரிக்கா எகிப்திடம் கூறியுள்ளது. அதேவேளை 34 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக எகிப்திய அரசைச் சார்ந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், தான் அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்த போதிலும் அந்த வாக்குறுதியை எகிப்திய ஆர்ப்பாட்டக் காரர்கள் நிராகரித்து தங்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.
30 ஆண்டு காலம் எகிப்தின் ஜனாதிபதி அதிகாரத்தில் இருக்கிறார். அவருக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மூன்றாவது வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உப ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள உமர் சுலைமான் எகிப்தின் புலனாய்வுப் பிரிவில் நீண்டகாலம் பதவியில் இருந்திருக்கிறார். தற்போது எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் உப ஜனாதிபதியுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு உடன்பாடு தெரிவித்திருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் நாட்டில் சமாதானமான முறையில் அரசியல் அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை தாங்கள் தயாரித்து வருவதாக அறிவித்துள்ளார்.

0 commentaires :
Post a Comment