மட்/ கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டிடம் மற்றும் விளையாட்டு அரங்கு என்பன இன்று (18.02.2011)கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி திறந்து வைக்கப்பட்ட விளையாட்டரங்கிற்கு அப்பாடசாலை சமுகம் மற்றும் பிரதேச மக்களது வேண்டுகோளின் படி முதலமைச்சரினது பெயர் சூட்டப்பட்டமை விசேட அம்சமாகும். முதலமைச்சரினது விசேட கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. மேற்படி நிகழ்வானது வித்தியாலயத்தின் அதிபர் சந்திரலிங்கம் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவருமான நா. திரவியம் மற்றும் கல்குடா கல்வி வலயப் பணிப்பாளர் சுபாசக்கரவர்த்தி, உதவிக் கல்விப் பணிப்பாளர் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்வி அதிகாரிகள் சகோதரப் பாடசாலையின் அதிபர்களும் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment