2/03/2011

சங்கானையில் காணிகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆய்வு

வலிகாமம் மேற்கு சங்கானை மத்தி ஜே. 181 கிராம உத்தியோ கத்தர் பிரிவல் நீண்ட காலமாக வசித்துவரும் குடியிருப்பாளர்களின் வேண்டுகோளின் பேரில் அவர்களது காணிப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஙகு நேரடியாக விஜயம் செய்தார்.
ஏற்கனவே அக்குடியிருப்பு மக்கள் பிரதிநிதிகள் கடந்த 18ம் திகதி அமைச்சரது யாழ். பணி மனைக்கு வருகை தந்து தமது கோரிக்கையினைத் தெரியப்படுத்திய நிலையில் அமைச்சர் அப்பகுதிக்கு விஜயம் செய்தார். இங்கு நடைபெற்ற சந்திப்பில் பிரதேச செயலாளரினால் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இங்கு குடியிருப் போரில் ஏற்கனவே அனுமதிப் பத்திரம் உள்ளோர்.
2006ம் ஆண்டிற்குப் பின்னர் அங்கு குடியேறியோர் வேறு பகுதியில் சொந்த காணி உள்ளோர், சொந்தக் காணியில் வீடுகள் உள்ளோர் மற்றும் அனுமதிப் பத்திரம் இன்றி குடியிருப்போர் ஆகியோர் அடைளாளம் காணப்பட்டனர்.
இதனடிப்படையில் ஏற்கனவே அனுமதிப் பத்திரம் உள்ளோர்க்கும் 2006ம் ஆண்டிற்குப் பின்னர் குடியேறியோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் காணியினைப் பகிர்ந்தளித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு தெரிவித்தார்.
மேலும் அக்குடியிருப்பாளர்களின் கோரிக்கையின் பேரில் பாதி கட்டப் பட்டுள்ள சனசமூக நிலையம் பூரணப்படுத்தப்படும் எனவும் மின்சார வசதி மற்றும் வீதி திருத் தம் என்பன கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குடியிருப்பாளர்களிடம் உறுதியளித்தார்

0 commentaires :

Post a Comment