2/10/2011

வெள்ளம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய குடும்பங்கள் தமது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டுள்ளன

batt_2011-3

 இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய குடும்பங்கள் தமது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டுள்ளன.
மாவட்டச் செயலக தகவல்களின்படி வெளியேறியிருந்த 62000 குடும்பங்களில் இதுவரை 40000 குடும்பஙகள் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளன.
இதன் காரணமாக 197 நலன்புரி முகாம்களில் 137 நலன்பரி முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு எற்பட்ட இழப்பீடுகள் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், தமது இருப்பிடங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இம்மாவட்டத்தில் இருமுறை ஏற்பட்ட வெள்ளங்களின்போது பகுதியாகவும் முழுமையாகவும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் சுமார் 5 ஆயிரம் வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் அலுவல்கள் தற்போது வழமைக்கு திரும்பிக்கொண்டிருந்தாலும் போக்குவரத்து தடைப்பட்ட சில இடங்களில் வள்ளங்கள் மூலம் தொடர்ந்தும் போக்குவரத்து நடைபெறுகிறது.

0 commentaires :

Post a Comment