2/23/2011

பிரத்தியேக வகுப்புக்களை நெறிப்படுத்துவதுடன் மார்க்கக்கல்விகளுக்கும் முன்னுரிமை -கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்

கிழக்கு மாகாணத்தின் பாடசாலைக்கல்விக்கு அப்பால் பிரத்தியேக வகுப்புக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. நவீன கல்வி மயப்படுத்தப்பட்ட போட்டி மிக்க உலக வாழ்க்கைக்கு பித்தியேக வகுப்புக்கள் அவசியமானதாக அமைந்தாலும் அது சமூகத்திற்கும், கல்வித்திட்டங்களுக்கும், பாடசாலைக் கல்விகளுக்கும் பெரும் சவாலாக அமைந்து வருகின்றது. இதனை மாகாண சபை மூலம் விசேடமாக ஒருங்கிணைந்து நெறிப்படுத்துவதற்கும்.
1. பிரத்தியேக வகுப்பு உரிமையைப் பதிவு செய்தல்
2. பிரத்தியேக வகுப்பிற்கு ஆசிரியர் அங்கிகாரம் வழங்குதல்
3. பாடசாலை கல்வித் திட்டத்துடன் ஒப்புரவையையும், நெறிப்படுத்தலையும் மேற்கொள்ளல்.
4. கட்டணம், நேரசூழல் ஒழுங்குகளைத் தீர்மானித்தல் உள்ளிட்ட பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பான செயற்பாடுகளுக்கு ஆலோசனைக்குழு அமைத்தல். சமூகத்தில் ஏற்பட்டுவரும் சமூகப்பற்றற்ற நிலையினை மாற்றி சமூக உணர்வுகள் மக்கள் முன் னொண்டுவருவதற்கு மார்க்கக்கல்வி இன்றியமையாததாக உள்ளது என சுட்டிக்காட்டிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஞயிறு தினங்களிலும் வெள்ளிக்கிழமை பிற்பகலிலும் மார்க்கக் கல்விகளை மாணவர்கள் மத்தியில் புகட்டுவதற்காக எந்த பிரத்தியேக வகுப்புக்களையோ நிகழ்வுகளையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியதுடன் மாணவ்ர்களின் கல்வியில் அதிக அக்கறை காட்டிவரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் சிந்தனைக்கு உரம் சேர்க்கும் வகையிலும் இலங்கையில் உள்ள மாகாண சபைகளில் அதிக தேவையுடைய கிழக்கு மாகாண சபை முன்னோடியாக செயற்படுவதற்கும் பிரத்தியேக வகுப்புக்களை நெறிப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என சுட்டிக்காட்டியதுடன்
போன்ற முன்மொழிவுகளுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களால் கிழக்கு மாகாண சபையில்  பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்காக மாகாண கல்வி அமைச்சர் தலைமையிலான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட கிழக்கு மாகாண சபையின் ஏழு பேர்கொண்ட விசேட குழு அமைக்கப்பட்டு மாகாண ரீதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. இப்பிரேரணையினை அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் ஏகமனதாக வரவேற்றனர்

0 commentaires :

Post a Comment