2/28/2011

புலிகளின் பாணியில் பேச்சுவார்த்தை விபரங்களை வெளியிடதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு




  அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது எதைப்பற்றி பேசுகின்றோம். என்ன கோரிக்கையை வலியுறுத்துகின்றோம் என்று ஏதும் கூற முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சந்திப்பு நடக்கும் அதுபற்றி எதுவும் கூற இயலாது என அரச தரப்பும் கூறுகின்றன.

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களைத் தெரிவிக்குமாறு கேசரி வார இதழின் சார்பில் கேட்டபொழுதே இரு தரப்பினரும் இவ்வாறு பதில் அளித்தனர்..

தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக இருதரப்பினராலும் பேசப்படவுள்ள விடயங்கள் குறித்து தமிழ் மக்களுக்கே அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக இல்லை என்பதே முக்கியமான விடயமாகும்..

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தச் சந்திப்பானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவே இடம்பெற்று வருவதுடன் அரசாங்க தரப்பில் முன்னாள் பிரதமரான ரட்ணசிறி விக்ரமநாயக்க தலைமையில் அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் அடங்குகின்றனர்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பேச்சுவார்த்தைக்கு சமாந்திரமாக புலம்பெயர்ந்த தமிழர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வது குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளதாக அறியவருகிறது. _

0 commentaires :

Post a Comment