2/09/2011

நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை என களுதாவளை கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளைக் கிராமத்திலே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்று நேற்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில்
 ஈடுபட்டனர். 
இன்று காலையிலும் குறித்த பிரதேச மக்கள் களுதாவளை பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னர் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின்போதும் தங்களுக்கு உரிய முறையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் இப்போது இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின்போதும் தாம் வெகுவாகப் பாதிக்கப்படடு; தங்கள் இருப்பிடங்களுக்குள் வெள்ளம் புகுந்ததனால் தாம் பாடசாலையில் தங்குவதற்கு வந்தபோது வந்தபோது தங்க வேண்டாம் உறவினர் வீடுகளுக்கு செல்லுங்கள் என்று பிரதேச செயலாளரினால் கூறப்பட்டதாக அம்மக்கள் தெரிவத்தனர்.
இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் நிவாரணங்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அம்மக்களிடம் சொல்லிச் சென்றார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனும் மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் அவர்களும் களுதாவளைக் கிராமத்துக்கு வருகைதந்து பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைக்கேட்டறிந்து கொண்டதோடு மக்கள் தங்கியிருக்கும் முகாமுக்கும் சென்றார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருதொகை உலருணவுப் பொருட்களை வழங்கியதுடன் களுதாவளை மற்றும் ஏனைய பிரதேசங்களிலே பாதிக்கப்பட்டிருக்கின்ற மேட்டுநில பயிர்ச் செய்கை தொடர்பாக விவசாயிகளிடம் கேட்டறிந்து கொண்டதோடு அவர்கள் தொடர்பிலும் அவர்களுக்கான நிவாரணங்கள் தொடர்பிலும் தாம் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment