2/04/2011

சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு விக்கிலீக்ஸ் இணையத்தளம் சிபாரிசு

உலகின் இரகசியங்களை வெளிப்படுத் துவதில் சமீப காலமாக சாதனைகளை படைத்துவரும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் 2011ம் ஆண்டின் நோபெல் சமாதான பரிசிற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இணையத் தளத்திற்கு வழங்கப்பட்ட இந்த உயர்ந்த கெளரவத்திற்கு பின்னணியில் நோர்வே அரசியல் வாதிகள் இருந்ததாக அறிவிக்கப்படுகிறது.
நோர்வேயின் நோபெல் சமாதான பரிசுகளை தீர்மானிக்கும் குழு விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை இதற்கு தெரிவு செய்யும் ஏனைய பெயர்களுடன் இணைத்துக் கொள்வதென்ற தீர்மானத்தை இரு தினங்களுக்கு முன்னர் எடுத்தது.
நோர்வேயின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்நோர் வெலன் 21ம் நூற்றாண்டில் பேச்சு சுதந்திர ஒழிவுமறைவற்ற அரசாங்கங்களின் நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதற்கு மகத்தான பங்களிப்பு அளித்திருப்பதாக கூறினார்.
இந்த இணையத்தளம் ஊழல், மோசடி, மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மையான தகவல்களை வெளிப்படுத்தி வருவதனால் விக்கிலீக்ஸ இணையத் தளத்திற்கு 2011ம் ஆண்டின் சமாதானத்திற்கான நோபெல் பரிசை கொடுத்து கெளரவிப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.
விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகர் ஜுலியன் அசாஞ் பல்லாயிரக்கணக் கான இரகசிய அரசாங்க ஆவணங்களையும் இராஜதந்திர திருகு தாளங்களையும் வெளியிட்டு அமெரிக்க அரசாங்கத்தை தர்மசங்கட நிலைக்கு தள்ளியிருக்கிறார்.
எனவே, இவருக்கு சமாதானத்திற்கான நோபெல் பரிசை வழங்குவது குறித்து அமெரிக்க அரசாங்கம் ஆத்திரமடைந்து ள்ளது.
அவுஸ்திரேலிய நாட்டுப் பிரஜையான ஜுலியன் அசாஞ் ஒரு பாலியல் வழக்கு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக பிரித்தானியாவில் இருந்து சுவீடனுக்கு நாடு கடத்துவதாக அறிவிக்கப்படுகிறது.
விக்கிலீக்ஸ் இணையத்தளம் இலாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல் இந்த பணியைச் செய்து வருவது குறிப்பிடத் தக்கது

0 commentaires :

Post a Comment