2/23/2011

திருமாவளவன் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அரசு நடவடிக்கை

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் இறுதிக்கிரியை களில் கலந்து கொள்ளும் பொருட்டு இலங்கையிடம் எந்தவித முன்னறிவித்தலும் விடுக்காமல் இலங்கை வந்த தமிழ் நாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் வைத்தே நேற்று திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் கட்டு நாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த திருமாவளவனும் அவருடன் வந்த அவ ரது சகாக்கள் இருவரும் குடிவரவு, குடி யகல்வு அதிகாரிகளால் இவ்வாறு திரு ப்பியனுப்பப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரி வித்தார்.
வெளிநாட்டு எம்.பியொருவர் இலங்கைக்கு வரும்போது அவருக்கான பாதுகாப்பு உள்ளிட்ட சகல விடயங்களையும் அரசாங்கம் கவனிக்க வேண்டியுள்ளது. திருமாவளவன் இலங்கை அரசாங்கத்துக்கு எவ்வித முன்னறிவித்தலும் விடுக்கவில்லை.
அத்துடன் கடந்த சில தினங்களாக இரு நாடுகளிலும் மீனவர்கள் சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களும் பிரச்சினைகளும் இட ம்பெறுகின்றபோது அவரது பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாமற் போகலாம்.
அதன் காரணமாகவே திருமாவளவனும் அவரது சகாக்களும் திருப்பியனுப் பப்பட்டனர் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். நேற்று தமிழ் நாடு திரும் பிய திருமாவளவன் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் தமது சகாக்களோடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்ட போது கைதுசெய்யப்பட்டு ள்ளார். அவருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவரது சகாக்கள் 300 பேரும் கைது செய்யப்பட்டதாக இந்திய தக வல்கள் தெரிவிக்கின்றன.

0 commentaires :

Post a Comment