2/26/2011

லிபியாவில் தொடரும் போராட்டம்: உள்நாட்டுப் போர் மூளும் அபாயம்

லிபியாவில் தொடரும் போராட்டம்: உள்நாட்டுப் போர் மூளும் அபாயம்



டுனீசியா, எகிப்துக்கு அடுத்தபடி யாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போரா ட்டங்கள் இடம்பெற்று வருகி ன்றன. ஜனாதிபதி முஅம்மர் கடாபி யின் 41 ஆண்டு கால ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது.
லிபிய நாட்டின் கிழக்குப் பகுதி எதிர்ப்பாளர்கள் வசமாகிவிட்டது. இராணுவத் தளபதிகளே கடாபியின் ஆட்சி பிடிக்காமல் மக்களோடு சேர்ந்துகொண்டு விட்டனர். லிபி யாவின் தூதரக அதிகாரிகள் ஒவ் வொருவராக பதவி விலக ஆரம் பித்துவிட்டனர்.
முஅம்மர் கடாபியின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது என்று அமெரிக்கா, பிரித் தானியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளி ட்ட மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துவிட்டன. அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்கி மூனும் அறிவித்துவிட்டார்.
முதல் கட்டமாக லிபியா மீது இராணுவ பொருளாதாரத் தடை கள் விதிக்கப்படும் என்றும், அதன் பின்னரும் நிலைமை சீரடைய வில்லை என்றால் பன்னாட்டுப் படைகள் மூலம் லிபிய ஆட்சி யாளர்கள் விரட்டப்படுவார்கள் என்றும் தெரிகிறது.
கடாபிக்கு விசுவாசமாக இருக் கும் இராணுவத்தினரும் கூலிப்ப டையினரும் தலைநகர் திரிபோலி யில் மக்களைக் கொடூரமாக அட க்கி ஒடுக்குகின்றனர்.
ஜனாதிபதி கடாபிக்கு எதிரான கலகம் லிபிய நாட்டின் மேற்குப் பகுதிக்கும் பரவியது. மக்களுக்கு ஆதரவாகக் களத்தில் இருந்து செயல்படுவோம். கடாபி கட் டளை இட்டாலும் மக்களைச் சுடமாட்டோம் என்று இராணுவ அதிகாரிகள் அறிவித்தனர்.
அதே சமயம் திரிபோலிக்கு 210 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மிசுராடா என்ற ஊரில் கடாபிக்கு விசுவாசமாக இருக்கும் இராணு வத்தினர் கண்மூடித்தனமாகச் சுட்ட தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர் என்று பி.பி.சி. தெரிவிக்கிறது.
தலைநகர் திரிபோலியில் கடாபிக்கு விசுவாசமான இரா ணுவ வீரர்களும் கூலிப்படை யினரும் அச்சமூட்டும் வகையில் நகரில் ரோந்து சுற்றி வருகின்றனர். எவராவது வீதியில் என்ன நடக்கிறது என்று வீட்டிலிருந்தபடி எட்டிப்பார்த்தால்கூட அழைத்துச் செல்கின்றனர். வீட்டில் இருப்ப வர்கள் கெஞ்சினாலும், அடித்து இழுத்துச் செல்கின்றனர். நீ அதிப ருக்கு விசுவாசியா, துரோகியா என்று கேட்கின்றனர் என்று அங்கி ருக்கும் ஊடகங்கள் தெரிவி க்கின்றன.
லிபிய மக்கள் வெளிநாடுகளில் உள்ள தங்களுடைய உறவினர்க ளுடன் கூட பேச முடியாதபடிக்கு தகவல் தொடர்பு துண்டிக் கப்பட்டிருக்கிறது. தொலைபேசி, கைபேசி, இணையத்தளம் உள் ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு களும் துண்டிக்கப்பட்டு விட்டன. இதனால் லிபியாவில் இருக்கும் தங்களுடைய உறவினர்களும் நண்பர்களும் என்ன ஆனார்கள் என்றுகூட தெரியாமல் மற்றவர்கள் பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டி ருக்கிறது.
நிலைமை மேலும் மோசமாவ தற்குள் லிபியாவைவிட்டு வெளி யேறிவிட வேண்டும் என்று ஆயிர க்கணக்கான வெளிநாட்டவர்கள் ஒரே சமயத்தில் புறப்பட்டுவிட் டனர். இதனால் விமான நிலை யங்களில் விமானங்கள் வருவதும் புறப்படுவதுமாகவே இருக்கின் றன. ஏராளமான நாடுகள் தங்கள் நாட்டவரை அழைத்துவர விமான ங்களையும் கப்பல்களையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த ஆரம்பித் துள்ளன.
ரஷியா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகியவை தங்கள் நாட்டவர்களை வெளியேற்றத் தொடங்கிவிட்டன. இந்தியாவும் சீனாவும் பெரிய அளவில் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. ஐரோப்பிய யூனியன், தென் கொரியா, அமெரிக்கா ஆகியவையும் இதைத் தொடங்கி விட்டன.
கடந்த 10 நாட்களாக நடை பெற்றுவரும் கிளர்ச்சியில் 300 பேர் இறந்திருப்பதாக லிபிய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று இத்தாலி நாட்டு வெளி யுறவு அமைச்சர் பிராங்கோ பிரித் தானியாவில் கூறுகிறார்.
கடாபியை எதிர்ப்பவர்களின் கிளர்ச்சி பெங்காசி நகரில்தான் முதலில் தீவிரமாகத் தொடங்கி யது. இப்போது அது அதைவிட தீவிரமாக பிற ஊர்களுக்கும் பரவி வருகிறது.
தொலைபேசி, கைபேசி, இணைய த்தள தொடர்புகள் அற்றுப்போயி ருந்தாலும், அரசை எதிர்ப்பவர்கள் தங்களுக்குள் தொடர்புகளை ஏற் படுத்திக்கொண்டு ஊர் ஊராகச் சென்று மக்களை அரசுக்கு எதி ராகப் போரிடுமாறு அறைகூவல் விடுக்கின்றனர்.
பெங்காசி, டொப்ருக் நகரங்க ளில் அரசு எதிர்ப்பாளர்கள் கடாபி க்கு கடைசி காலம் வந்துவிட்டது என்று கூறி பட்டாசு வெடித்து தேசியக் கொடிகளைக் கையில் வைத்துக்கொண்டு உற்சாகக் கூத் தாடுகின்றனர். பாட்டுப்பாடி நட னம் ஆடுகின்றனர்.
இதனிடையே கடாபி தானாகப் பதவி விலகட்டும் என்று காத்தி ராமல், ஆயிரக்கணக்கான உயிர்ப் பலிகளைத் தடுத்து நிறுத்துவது சர்வதேசக் கடமை என்று கருது கிறார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. இது தொடர்பாக முத லில் அமெரிக்க அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகி றார். பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஐரோப்பிய யூனியன் போன்ற தோழமை நாடு களின் தலைவர்களுடைய கருத்து க்களையும் அவர் கேட்டு வருகிறார்.
கடாபியின் அடக்குமுறை ஆட்சியை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், சுமுகமாக ஆட்சி மாற்றம் நடை பெற உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வரும் திங்கட்கிழமை ஜெனீவா நகருக்குச் செல்கிறார். அங்கு மனித உரிமைகள் கவுன்சில் கூட்ட த்தில் பங்கேற்க பல்வேறு வெளி நாடுகளின் அமைச்சர்கள் வருகின் றனர். அங்கு லிபிய நிலைமை குறித்துத்தான் முக்கியமாக விவாதி க்கப்படும் என்று தெரிகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டப் பிரிவின் நல்லெ ண்ணத் தூதராக கடாபியின் மகள் ஆயிஷா அல் கடாபி நியமிக்கப் பட்டிருந்தார். சமீபத்திய நடவடிக் கைகளுக்குப் பின்னர் அவரை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டது ஐ.நா. சபை.

0 commentaires :

Post a Comment