2/12/2011

ஜாதியை அடியோடு அழிக்க பன்னாட்டுச் சமூகம் முன்வர வேண்டும் *நவநீதம் பிள்ளை








ஆசியாவிலிருந்து சாதிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று அண்மையில்என்னைச் சந்தித்துஉடைத்து எறியப்பட்ட பொதுக் கழிவறையின் சுவரிலிருந்த ஓர் செங்கல்லை என்னிடம்அளித்தனர்அந்தச் செங்கலானது, "கீழ் சாதி'யினரை வெறுங்கையால் பொதுக் கழிப்பிடத்தை சுத்தப்படுத்தநிர்பந்திக்கும் அவலமான வழக்கத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் குறியீடாகும்.
இந்த அவலமான வழக்கம்சட்ட ரீதியான தடைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்த போதிலும் 

 நவி பிள்ளை, அய்.நா. அவையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர்
பலபகுதிகளில் இன்றும் நடைமுறையில் இருக்கிறதுஇந்த வேலையை எவரும் விருப்பத்தின் காரணமாகசெய்வதில்லைஇதுஅவர்களின் சமூக மூலமான சாதியின் அடிப்படையில் தலைமுறை தலைமுறையாகஅவர்கள் மீது சுமத்தப்படுகிறதுஅதன் விளைவாகஒதுக்கப்பட்ட இம்மக்கள்வேலையால் மேலும் அழுக்கானவர்களாக்கப்பட்டு – பரம்பரை பரம்பரையாக சமூகத்தில் நிலவக் கூடிய தனிமைப் படுத்துதலில் சிக்கிக்கொள்கிறார்கள்இதனால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இன்று சாதியால் பாதிப்பிற்குள்ளான சமூகங்களும்சமூக ஆர்வலர்களும் – இன்னும் பலமாக கட்டப்பட்டுள்ள,கண்ணுக்குப் புலப்படாத "ஒதுக்கப்படுதல்எனும் பெருஞ்சுவரைத் தகர்த்தெறிய முடியும் என்ற நம்பிக்கையோடுஇருக்கிறார்கள்அதற்காக புதிய சர்வதேச சமத்துவ நிலைகளையும்பாகுபாடற்ற நிலைகளையும் கொண்டுவிழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்அவர்களுடைய மன உறுதியின் மீதும்தைரியத்தின் மீதும் நான் மிகுந்தமதிப்பு வைத்திருக்கிறேன்இனவெறி கொண்ட தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மை கறுப்பினப் பெண்ணாகவளர்ந்த எனக்கு "ஒதுக்கப்படுதல்என்பதின் பொருள் நன்கு புரியும்.


தீண்டாமை என்னும் சமூக அவலம் உலகெங்கும் சுமார் 26கோடி மக்களை பாதிக்கிறதுஇம்மாதிரியான ஒதுக்கப்படுதல்பல்வேறு சமூகபண்பாடுகளில் ஆழமாகக் காணப்படும்சடங்கு ரீதியிலான கொள்கைகளில் பிணைக்கப்பட்டுள்ளன.இந்த அவலம் ஒரு குறிப்பிட்ட பூகோள பகுதியிலோ,குறிப்பிட்ட மதத்தில் மட்டுமோ நடைபெறும் செயல் அல்ல.இது ஒரு சர்வதேச அவலம்.
மனித உரிமையின் அடிப்படைப் பண்புக் கூறுகளான பாகுபாடுகாட்டாமைவேற்றுமையின்மை ஆகியவற்றை சாதிமறுக்கிறதுஅது ஒருவனை பிறப்பிலிருந்தே பழிக்குஉள்ளாக்குகிறதுஅவன் சார்ந்த சமூகத்தை சுரண்டலுக்கும்,வன்முறைக்கும்சமூக ஒதுக்குதலுக்கும்வெறுத்துஒதுக்கப்படுவதற்கும் உள்ளாக்குகிறதுசாதிய பாகுபாடு –மனித உரிமை மீறல் மட்டுமின்றிஅதனால்பாதிக்கப்படுபவர்களின் இன்னும் பிற சமூகஅரசியல்பொருளாதாரப் பண்பாட்டு உரிமைகள்பறிக்கப்படுவதற்கும் ஏதுவாகிறது.
"கீழ் சாதியினர்என முத்திரையிடப்பட்ட நபர்கள்தலைமுறை தலைமுறையாக குறைந்த வருமானம்ஈட்டக்கூடிய தொழில்களையே செய்ய கட்டாயப்படுத்தப் படுகின்றனர்அவர்களுக்கு விவசாயம் செய்யநிலங்களோஅதற்கு கடனுதவிகளோ கிடைப்பதில்லைஇவர்கள் மீளமுடியாத கடன் சுமையினால்,கொத்தடிமைகளாகவும் வாழ்ந்து வருகின்றனர்தற்கால அகராதியில் இதை அடிமை வாழ்வு என்றே அழைக்கவேண்டும்நீதிக்காகவும்இழப்பீடுகளுக்காகவும் இம்மக்கள் கடக்க வேண்டிய தடைகள் அசாதாரணமானவை.பிறப்பின் அடிப்படையில் "கீழ்சாதிஎனப்படுபவர்களின் குழந்தைகளிடையேதான் குழந்தைத் தொழிலாளர்முறையும்அதிக எழுத்தறிவின்மையும் காணப்படுகின்றனபெண்களுக்கு சாதி என்பதுஅவர்களுடையதுயரைப் பன்மடங்காக்கும் கூராகும்இதனால் வறுமையும்ஒதுக்கப்படுதலும் அதிகரிக்கவே செய்யும்.
இந்த அவலத்தைத் தடுக்க பல நாடுகளில் சட்டமும்கொள்கைகளும் இருக்கின்றனசாதி ரீதியான பாகுபாட்டைஅரசியல் சட்டங்கள் தடை செய்துள்ளன. "கீழ் சாதி'யை சேர்ந்தவர்கள் நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்சுரண்டலுக்கும்வன்முறைக்கும் எதிரான பாதுகாப்புகல்விவேலைவாய்ப்புகளுக்குமுன்னுரிமை என சிறப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளனபாதிக்கப்படுவோர்க்கு நீதியும்இழப்பீடும் வழங்கநீதித்துறை தலையிட்டிருக்கிறதுநிலைமைகளை கண்காணித்து "கீழ் சாதிமக்களுக்கு ஆலோசனை வழங்கஅர்ப்பணிப்புள்ள நிறுவனங்கள் செயல்படுகின்றன.
அனைத்து வகை இனப்பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான பன்னாட்டு ஒப்பந்தம்இனப்பாகுபாட்டிற்கானஅடிப்படை பிறப்பு ரீதியிலானது என்பதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளதுடர்பன் மாநாட்டுப் பிரகடனமும், 2001இல் இனவாதத்திற்கு எதிராக உலக அரங்கில் கொண்டு வரப்பட்ட செயல்திட்டமும்பிறப்பின்அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் வேறுபாடுகளை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளனஅந்தப்பாகுபாட்டை களைவதற்கு தெளிவான செயல் திட்டத்தையும் அவை அளித்துள்ளனஅச்செயல்திட்டத்தைஏப்ரல் 2009இல் எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.
எனினும் சாதிய வேறுபாடுகளைக் களையஇலக்கு நோக்கிய சமூகக் கொள்கைகளும் திட்டங்களும்உருவாக்கப்பட வேண்டும்பிறப்புஅதிகாரம்பணபலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆழமாகப் பதிந்துள்ளசமூகபண்பாட்டு நம்பிக்கைகளை மாற்றுவதற்கு கல்வித் திட்டங்கள் அவசரமானதவிர்க்க முடியாத ஒன்று.அனைத்திற்கும் மேலாக சாதிய பாகுபாட்டிற்கு உள்ளான இனக்குழுக்களுக்கு – அவர்களுக்கான வளர்ச்சித்திட்டங்களை திட்டமிடுவதிலும்செயல்படுத்துவதிலும்மதிப்பீடு செய்வதிலும் முழு உரிமைகளையும்கொடுக்க வேண்டும்தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக பன்னாட்டு சமூகம் ஒன்றுபட்டு குரல்கொடுத்ததுபோலஇந்த முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும்.
மக்களை வறுமையிலும்நம்பிக்கையற்ற வாழ்விலும் தள்ளும் வெறுக்கத்தக்க செயல்களான –ஒதுக்கப்படுவதற்கும்விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதற்கும் எதிராக நடவடிக்கை எடுப்பது உடனடி தேவை.இதுநாடாளுமன்றத் தேர்தலில் ஆதிக்க சாதி வேட்பாளருக்கு வாக்களிக்க மறுத்துதாம் விரும்பியவேட்பாளருக்கு வாக்களித்ததால் ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கப்பட்ட "கீழ் சாதிகுடும்பங்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமைஅரசாங்கத்தின் பொது நலத் திட்டங்களால் பயன் பெற முடியாமல் சாவோடு போராடிய "கீழ்சாதிமக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைபொது இடத்தில் வைத்து வன்கொடுமை செய்யப்பட்ட கீழ் சாதிபெண்ணுக்கும்ஆதிக்க சாதியினரால் பொது இடத்தில் அவமானப்படுத்தப்பட்டுதன் கழிவையே தின்னவைக்கப்பட்ட பெண்ணுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமை.
சாதியால் பாதிக்கப்பட்ட அனை வருக்கும் நீதியும்நியாயமும் கிடைக்க வேண்டும்பாரம்பரியம்வழக்கம்என்று கூறியோ "குலத் தொழில்என்று கூறியோ கோடிக்கணக்கான மக்களின் அவல நிலையை நியாயப்படுத்தமுடியாது.
மனித உரிமைகளை காக்கவும்வளர்க்கவும் பல நாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பான மனிதஉரிமைக் குழுவானது, "வேலை மற்றும் பரம்பரை அடிப்படையிலான பாகுபாடுகளை திறம்பட நீக்குவதற்கானவரைவுக் கோட்பாடு மற்றும் வழிகாட்டு நெறிகள் – 2009அய்ஆதரித்து ஆக்கப்படுத்த வேண்டும்இவ்வறிக்கைஇனப்பாகுபாட்டிற்கு எதிராக தற்பொழுதுள்ள நியதிகளையும் கோட்பாடுகளையும் முழுமையாக்குகிறதுஇந்தகட்டளை சட்டங்களை எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டு செயல்படுத்த வேண்டும்.
சாதி எனும் கேவலமான கருத்தியலை அடியோடு அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதுஅழிக்க முடியாதுஎன்று கருதப்பட்ட பிற அடிமை முறைஇனவெறி போன்ற கடும் சவால்கள் எல்லாம் கடந்த காலங்களில்தகர்த்தெறியப் பட்டுள்ளனஎனவேசாதி எனும் சுவரையும் நாம் தகர்த்தெறிய முடியும்தகர்த்தெறிய வேண்டும்.

-----------------
இக்கருத்துரை 8.10.2009 அன்று வெளியிடப்பட்டது.
தமிழில்: மாணிக்கம்     நன்றி *தலித் முரசு 

0 commentaires :

Post a Comment