2/23/2011

அமெரிக்காவுக்கெதிராக பலஸ்தீனில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்கா தான்தோறித்தனமான முடிவுகளை எதிர்த்து பலஸ்தீனின் மேற்குக்கரையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இஸ்ரேலின் திட்டமிட்ட யூதக் குடியேற்றங்களைக் கண்டித்து ஐ. நா. பாதுகாப்புச் சபை நிறைவேற்றிய கண்டனத் தீர்மானம் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தால் ரத்துச் செய்யப்பட்டது.
இதைக் கண்டித்தே மேற்குக் கரையில் பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பதா அமைப்பினர் இதை ஏற்பாடு செய்தனர். அமெரிக்காவின் உண்மையான நிலைப்பாடு தெரிந்துவிட்டது. மத்திய கிழக்கில் சமாதானத்தை கொண்டு வரும் எண்ணம் அமெரிக்காவிடம் இல்லையென ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷமிட்டனர்.
இஸ்ரேலின் யூத விஸ்தரிப்புக் கொள்கையை ஐ. நா. பாதுகாப்புச் சபையிலுள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் எதிர்த்தன. சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், பிரேஸில், பொஸ்னியா, கொலம்பியா, காபொன், ஜேர்மன், இந்தியா, லெபனான், நைஜீரியா, போர்த்துக்கல், தென்னாபிரிக்கா என்பன இஸ்ரேலுக்கெதிராக வாக்களித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத் தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தில் செல்லுபடியற்ற தாக்கியது. இஸ்ரேலின் அநீதியான செயற்பாடுகளை அமெரிக்கா ஆதரிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

0 commentaires :

Post a Comment