தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியற் பயிற்சிப் பாசறை இரண்டு நாட்கள் நடந்தது. நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலே தனித்துப் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தமது வேட்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில்மேற்படி இரண்டுநாள் செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தது. அச் செயலமர்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற சகல வேட்பாளர்களும் கலந்து கொண்டார்கள்.அதனை உத்தியோகபூர்வமாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார்.இன்று(18.02.2011) இரவுடன் இப் பாசறை நிறைவு பெற்றது.
0 commentaires :
Post a Comment