2/16/2011

கம்போடியா, தாய்லாந்து விவகாரம் நிரந்தர யுத்தநிறுத்தத்துக்கு ஐ. நா. அழைப்பு

கம்போடியாவையும் தாய்லாந்தையும் நிரந்தர யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு வருமாறு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை அழைத்துள்ளது.
தென் கிழக்காசியாவிலே அயல் நாடுகளாக இருக்கும் கம்போடியாவினதும் தாய்லாந்தினதும் இராணுவத்தினர் எல்லைப் பிரச்சினை தொடர்பில் மோதலில் ஈடுபட்டனர்.
உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இருக்கும் இந்துக் கோயில் ஒன்றுக்கு உரிமை கோரியே இந்த மோதல் ஆரம்பித்தது.
பின்னர் பதற்றம் நிறைந்த சூழலில் யுத்த நிறுத்தம் பேணப்பட்டது. இந்நிலையில் இம் முரண்பாட்டைத் தீர்த்து வைக்குமாறு தாய்லாந்தைப் பேச்சுக்கு அழைக்குமாறும் ஐ. நா. பாதுகாப்புச் சபையை கம்போடியா கோரியுள்ளது.
இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் ஆசியான் அமைப்பின் தலைவரும் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சருமான மாட்டி நட்டலெகவா முன்னிலையில் சந்தித்தனர்.
நிரந்தர யுத்த நிறுத்தத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நட்டலெகவா கருத்துத் தெரி வித்தார்

0 commentaires :

Post a Comment