இலங்கையிலுள்ள யானைகளின் எண்ணிக்கை நாளாந் தம் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான ஜீவமரணப் போராட்டம் காரணமாக குறைந்து வரு கிறது. இதனால், எங்கள் நாட்டின் வரலாற்றில் முதல் தட வையாக யானைகள் பற்றிய கணக்கெடுப்பு ஒன்றை எதிர் வரும் ஒகஸ்ட் மாதத்தில், மேற்கொள்வது என்று வன விலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அது போன்றே, கடந்த காலத்தில், நாட்டின் மேம்பாட்டிற்காக அரும்பாடுபட்டு உழைத்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும் இன்று யானைகளுக்கு நடந்தது போன்ற அழிவு ஆரம்பமாகியிருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர்கள் மற்றும் ஆதவா ளர்கள் எத்தனை பேர் இலங்கையில் இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்வது பொருத்தமாக இரு க்கும்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பாகும் கதை தான் இன்று ஐக்கிய தேசிய கட்சியை எதிர்நோக்கியிருக்கிறது. இந்தக் கட்சி ரணில் விக்கிரமசிங்கவின் அணி, சஜீத் பிரேமதாஸவின் அணி, ரவி கருணாநாயக்காவின் அணி போன்ற பலதரப்பட்ட அதி காரத்தை கைப்பற்றும் சுயநல நோக்குடைய அரசியல் வாதிகளின் உட்கட்சி போராட்டத்தினால் பிளவுபட்டு சீர் குலைந்து போகும் ஆபத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக் கிறது.
எனக்குத் தான் சர்வதேச ரீதியில் வெளிநாடுகளின் ஆதரவு இருக்கிறது. நான் தான் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் இருக்க வேண்டும். இல்லையானால், எங்கள் கட்சி அடுத்த 15, 20 வருடங்களுக்கு எதிர்கட்சி அணியிலேயே இருந்து, வலுவிழந்து ஜே. வி. பி. யப் போன்று மக்கள் ஆதரவற்ற ஒரு கட்சியாக மாறிவிடும் என்று, ரணில் விக்கிரமசிங்க மறை முகமாக கட்சியின் தேர்தல் பிரசாரங்களின் போது வலியு றுத்தி வருகிறார்.
எனது தந்தை ஜனாதிபதியாக இருந்து நட்டிலுள்ள ஏழை மக்க ளுக்கு மகத்தான சேவையாற்றிருக்கிறார். என்னால் மட் டுமே கட்சிக்கு தலைமை தாங்கி, கட்சியை மறுமலர்ச்சிய டையச் செய்ய முடியும் என்று சஜீத் பிரேமதாஸா வாதாடி வருகிறார்.
அவருக்கு கட்சியின் கீழ்மட்டத்திலுள்ள அங்கத் தவர்களின் அதரவு ஓரளவு இருந்து வந்தாலும், கட்சியின் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் முதலாளித் துவ சக்திகளின் ஆதரவு இல்லாது இருக்கிறது. நாம் எமது வகுப்பைச் சார்ந்த ஒரு பெரிய குடும்பத்திலிருந்து வரும் ஒருவருக்கே கட்சியின் தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும் என்று இன்னுமொரு சாரார் வாதாடுகிறார்கள்.
ஜயவர்த்தனபுர கோட்டை தொகுதியில் தனது செல்வாக்கு குறை ந்து வந்ததால் அங்கு போட்டியிட்டால் நிச்சயம் தோல்வி யடைவேன் என்று நினைத்து வடகொழும்புத் தொகுதிக்கு பரசூட் மூலம் போய் இறங்கி கட்சிக்காக நீண்டகாலம் உழை த்துவரும் ஒரு மேல் மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பி னரின் பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கு இருந்த வாய் ப்பை பறித்துக் கொண்டு தமிழ் மக்களின் ஆதரவினால் பாராளுமன்றத்திற்கு நுழைந்திருக்கும் ரவி கருணாநாயக் கவும், தனக்கு கட்சியின் இரண்டாம் நிலை தலைமைப் பதவி அவசிய,. அதனை சஜீத் பிரேமதாஸாவுக்கு கொடு ப்பதை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்ற நிலை யில் இருந்து வருகிறார்.
அரசாங்க கட்சியை தோற்கடித்து நாம் உள்ளூராட்சி மன்ற தேர்தலில வெற்றி வாகை சூடி ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களின் நிர்வாகத்திற்கு சவால் விடுவோம் என்று மார்பு தட்டிவரும் ஐக்கிய தேசிய கட்சியினர் அரசாங்க கட்சியை எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தோல்வி அடைய செய்வதற்கு முயற்சி செய்வதற்கு முன்னர் தங் கள் கட்சிக்குள் விஸ்வரூபம் எடுத்து வரும் பிளவுகளை நீக்கிவிட எத்தனிக்க வேண்டும்.
தனது சிறந்த கொள்கை கள் மூலமும், நேர்மை, கடமை, கட்டுப்பாடு ஆகிய அணி கலன்களுடன் இந்நாட்டு மக்களுக்கு தனது ஆளுமை திறன் மூலம் மகத்தான பணியாற்றி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆளும் கட்சியை இலகு வில் தோல்வியடையச் செய்ய முடியாது என்ற உண்மையை உணர்ந்து ஐக்கிய தேசிய கட்சி செயற்பட வேண்டும்
0 commentaires :
Post a Comment