ஆபிரிக்க நாடான சூடான் தெற்கு, வடக்கு என இரண்டாகப் பிரிவதற்கு மொத்தம் 98.83 சதவீத மக்கள் ஆதரவளித்துள்ளதாக தெற்கு சூடான் பொது வாக்கெடுப்பு ஆணைக்குழு நேற்று முன்தினம் அறிவித்தது. மக்களின் முடிவை வரவேற்பதாக, சூடான் ஜனாதிபதி அல் பiர் தெரிவித்தார். இந்தாண்டு ஜூலை மாதம் புதிய தெற்கு சூடான் நாடு அதிகாரபூர்வமாக உருவாகும்.
2005 இல் அரசுக்கும் புரட்சிக் குழுக்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி இந்தாண்டு ஜனவரி 9 முதல் 15 ஆம் திகதி வரை பிரிவினைக்குக் கருத்துக் கோரும் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதன் முதற்கட்ட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
மொத்தம் 38 இலட்சம் பேர் பிரிவினைக்கு ஆதரவாகவும் 45 ஆயிரம் பேர் ஒற்றுமைக்கு ஆதரவாகவும் வாக்களித்ததாக ஆணைக்குழுவின் தலைவர் முகமது இப்ராகிம் கலீல் தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் அறிவிப்பு வெளியானவுடன் தெற்கு சூடான் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சூடான் அதிபர் அல் பiர், “இந்த முடிவை ஏற்றுக் கொண்டு வரவேற்கிறேன். தெற்குப் பகுதி மக்களின் விருப்பத்தை இந்த முடிவுகள் பிரதிபலிக்கின்றன.
தெற்கு சூடானுடன் எதிர்காலத்தில் சுமுகமான உறவைப் பேணுவோம்” என்றார். தெற்கு சூடான் தலைவர் சல்வா கிர், “வடக்கு சூடானுக்கு ஒத்துழைப்பு தருவோம். பயங்கரவாதிகளை வளர்க்கும் நாடுகள் பட்டியலில் இருந்து சூடானை நீக்கப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது

0 commentaires :
Post a Comment