2/10/2011

ஒருமைப்பாட்டை ஏற்படுத்த இரு மொழி பயன்பாடு அவசியம்

ஒருமைப்பாட்டை ஏற்படுத்த
இரு மொழி பயன்பாடு அவசியம்



நாட்டில் ஒருமை ப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இரு மொழிப் பயன்பாடு இன்றியமையாத தென்றும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஓர் அடித்தளத்தை தமது அமைச்சு உறுதியாக இடுமென்றும் தேசிய மொழிகள், ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு தேசிய ஒருமைப்பாடு மிக முக்கியத்துவமானது என்று தெரிவித்த அமைச்சர் வாசு, நீதிக்கும் சட்டத்திற்கும் அப்பாற்பட்ட மக்களின் பிரச்சினைகளை இனங்காணத் தவறியமை பிரச்சினை உருவாகக் காரணமாகுமென்றும் அதன் பிரதிபலிப்பை பொலிஸ் திணைக்களத்தில் கண்டுகொண்டதாகவும் கூறினார்.
கனேடிய அரசின் உதவியுடன் வெளியிட்டுள்ள பொலிஸாருக்கான உரையாடல் நூலை பொலிஸ் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் வைபவத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இரு மொழிப் பயன்பாட்டை கனேடிய அரசாங்கம் வெற்றிகரமாக அமுல்படுத்தியு ள்ளது. அதன் அனுபவங்களையும் வேறு நாடுகளினதும் சிறந்த பெறுபேறுகளைக் கருத்திற் கொண்டும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறிய அமைச்சர் நாணயக்கார, தொழில்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது சரியாகவும் முறையாகவும் கொள்கையைப் பின் பற்றினால் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றார்.
அடுத்த கட்டமாக சுகாதாரத் துறைக்கு இந்த உரையாடல் நூலை வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

0 commentaires :

Post a Comment