2/08/2011

தாய்லாந்து - கம்போடியா இராணுவத்தினரிடையே மோதல் உக்கிரம்

900 ஆண்டுகள் பழைமையான இந்துக்கோயிலையும் அதனை அண்டிய பகுதிகளையும் உரிமை கோரி தாய்லாந்து கம்போடிய இராணுவத்தினரிடையே மோதல் கடந்த வெள்ளியன்று ஆரம்பித்தது. மூன்றாவது நாளான நேற்று ரொக்கட்டுகள், இராணுவத்தாங்கிகள், துப்பாக்கிகளின் பயன்பாட்டால் மோதல் உக்கிரமடைந்தது.
11ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரீவிகர், கோயிலைச் சூழவுள்ள பகுதிளில் ஏறத்தாழ 4.6 சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கு எறிகணைச் சத்தத்தைக் கேட்கக் கூடியதாக விருந்தது.
அயல் மற்றும் எல்லைக்கிராமங்களில் வசித்து வந்த 2500க்கும் மேற்பட்ட கம்போடிய வாசிகள் இடம்பெயர்ந்திரு க்கின்றனர்.
எல்லைப் பகுதிகளில் தாய்லாந்து இராணுவம் அதிகளவில் குவிக்கப்பட்டிருப்ப துடன் இராணுவத் தாங்கிகள் பல நிறுத்தப்பட்டிருந்தமையே அவ்விடம் உயர்வுக்கான காரணமாகும்.
தாய்லாந்தின் கந்தரலக் மாவட்ட வைத்தியசாலையில் காயமடைந்த 10 இராவத்தினரும் 2 பொது மக்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கம்போடிய இராணுவத்தைக் குற்றஞ்சாட்டும் தாய்லாந்து இராணுவப் பேச்சாளர் சமாதான உடன்படிக்கை ஏதும் இதுவரை எட்டப்படவில்லை என்றார்.
இருநாடுகளையும் பின்வாங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்துகிறது. இந்த நிலை அந்நாடுகளின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்குமென எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு நாடுகளுமே அங்கத்துவம் வகிக்கும் ஆசியான் அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது

0 commentaires :

Post a Comment