தரைமார்க்கம் முற்றாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு முதலமைச்சரினால் விநியோகம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பல பிரதேசங்களின் போக்குவரத்து முற்றாககப் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பின் வவுணதீவபு பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட கரவெட்டி, மகிழளடித்தீவு, நரிப்புல்தோட்டம், ஈச்சந்தீவு, தில்லன் தோட்டம் போன்ற பிரதேசங்கள் முற்றாக வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகி போக்குவரத்தும் முற்றாக செயலிழந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் உணவுக்காhக மிகவும் கஸ்டப்பட்ட நிலையிலே இருக்கின்றார்கள். இன்று (05.02.2011) படகுகள் மூலம் அப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அம்மக்களுக்கான உலர் உணவுகளை வழங்கி வைத்ததோடு, அவர்களுக்கான சமைத்த உணவு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டார்.
[embed]http://www.youtube.com/watch?v=AhGooGWlN-M[/embed]
Chief Minister of Eastern Province of Sri Lanka in Vaunathivu
Chief Minister of Eastern Province of Sri Lanka in Vaunathivu
0 commentaires :
Post a Comment