கடந்த 8 நாட்களாக நடந்த மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுபவரிடம் சட்டப்படி அதிகாரத்தைக் கையளிப்பதாக கடந்த செவ்வாயன்று இரவு ஹொஸ்னி முபாரக் அறிவித்திருந்தார்.
நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்துள் ளது. இதற்கு காரணமான அதிபர் பதவியை விட்டு விலக வேண்டுமென்று கோரி கடந்த ஒரு வார காலமாக ஆர்ப் பாட்டக்காரர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிபர் முபாரக் தொலைக்காட்சியில் தோன்றி பேசினார்.
அதில் நாட்டில் அமைதியை நிலைநாட்ட விரும்புகிறேன் அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறேன். அதற்காக புதிய தலைவர்கள் நியமிக்கப் படுவர் என கூறினார். அதன் மூலம் எகிப்தையும் எகிப்திய ரையும் பாதுகாக்கக் கூடியதான சூழலொன்றிலே அமைதியான வழியில் அதிகாரத்தைக் கைமாற்ற வேண்டும். இனிவரும் காலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் மக்களால் தெரிவு செய்யப்படுபவரிடமே அவ்வறு கைமாற்றப்படும் என்றார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. இருப்பினும் தற்போதைய பதவிக்காலம் முடியும் வரை நான் விலக போவதில்லை என்று கூறினார்.
இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரண்டாம் இடத்தில் உள்ள மற்ற நகரங்களான அலெக்சாண்ட்ரியா, சூயஸ், மான்சவுரா, லுக்சார் போன்ற இடங்களிலும் அதிபருக்கு எதிரான கலவரம் பரவி வருகிறது

0 commentaires :
Post a Comment