2/01/2011

எகிப்தில் அரசுக்கெதிரான போராட்டம் தீவிரம்;;;: அமெரிக்காவை தலையிடுமாறு எதிரணி வலியுறுத்தல்

எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்களில் அந்நாட்டு எதிர்க் கட்சியின் முக்கியஸ்தர்க ளில் ஒருவரான மொஹமட் எல்பராடியும் இணைந்து கொண்டுள்ளார்.
எகிப்தில் உக்கிரமடைந்திருக்கும் வன்முறைச் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்பராடி கோரிக்கை விடுத்துள்ளார்.
30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முபாரக் ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலக வேண்டும், அதற்கான காலம் ஏற்பட்டுவிட்டுது. இவ்விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெளிவான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டும் என்றும் எல்பராடி வலியுறுத்தியுள்ளார்.
30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் ஜனாதிபதி எகிப்திய மக்களுக்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுக்க முடியாது எனக் குறிப்பிட்டிருக்கும் எல்பராடி, தற்பொழுது தோன்றியிருக்கும் பதற்றமான சூழ்நிலை குறைக்கப்பட்டு முபாரக் வெளியேறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றும், இல்லாவிட்டால் நிலைமை மோசமடைந்து இரத்த வெள்ளம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
அதேநேரம் உப ஜனாதிபதியொருவரை ஹொஸ்னி முபாரக் நியமித்ததைத் தொடர்ந்து எகிப்தில் இடம்பெற்றுவந்த வன்முறைச் சம்பவங்கள் மேலும் உக்கிரமடைந்தன. பல வர்த்தக நிலைய ங்கள், அலுவலகங்கள், உடைக்கப்பட்டு பெரும் பணம், பொருட்கள் கொள்ளை யிடப்பட்டிருப்பதுடன், பல இடங்கள் தீயிடப்பட்டுள்ளன.
முஸ்லிம் ஆயுதக் குழுவொன்று எகிப்திலுள்ள நான்கு சிறைச்சாலைகளு க்குள் புகுந்து அங்கு தடுத்து வைக்கப் பட்டிருந்தவர்களை வெளியேற்றியு ள்ளது. பெரும் எண்ணிக்கையான ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதால் எகிப்தியப் பாதுகாப்புத் தரப்பினரால் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எகிப்தில் இணையத்தள வசதிகள் யாவும் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கிருந்து செயற்பட்டு வந்த அல்ஜசீரா தொலைக்காட்சி நிறுவனமும் மூடப்பட்டு ள்ளது. ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடை ந்திருக்கும் நிலையில் பாதுகாப்பு நிலவரம் குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
எகிப்தில் தோன்றியிருக்கும் வன்முறைச் சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எகிப்திற்குச் செல்லவேண்டாம் என பல நாடுகள் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவித்திருக்கும் அதேநேரம் எகிப்திலுள்ள தம்நாட்டுப் பிரஜைகளை பாதுகாப்பாக அழைத்துவருவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளன.
மக்களின் அழைப்பை ஏற்று இராணுவ வீரர்கள் பலர் தங்களது சீருடைகளை களைந்துவிட்டு அரசுக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர். எகிப்திய வரலாற்றில் முதல் முறையாக நீதிபதிகளும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
கலவரம் வலுத்து வருவதையடுத்து கைதிகள் சிறைகளில் இருந்து தப்பி போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கெய்ரோவுக்கு வடக்கே உள்ள இல் பயும் என்ற இடத்தில் பொலிஸாரை கொன்றுவிட்டு 5 ஆயிரம் கைதிகள் தப்பியுள்ளனர்.
பொது மக்களின் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அமைச்சரவையை கலைத்து விட்டபோதிலும் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக மறுத்து வருகிறார். நாட்டில் ஜனநாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் புதிய பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வரப்போவதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி முபாரக்கின் 30 ஆண்டு கால ஆட்சியில் முதன் முறையாக துணை ஜனாதிபதி ஒருவரை அவர் நியமித்துள்ளார். அவரது நெருங்கிய நண்பரும் உளவுத்துறை தலைவருமான உமர் சுலைமான் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த அகமது ஷாபீக் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எகிப்தில் புதிய அரசாங்கத் தின் உருவாக்கம் சீரான ஒழுங்கு முறையில் இடம்பெற வேண்டும் என்று அமெரிக்கா கூறுகிறது. எனினும் ஹொஸ்னி முபாரக் ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்க வேண்டும் என்று அமெரிக்கா கூறவில்லை.
அமெரிக்காவின் இந்த நிலையை ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன் தொலைக்காட்சிகளில் தோன்றி வெளிப்படுத்திய அதேவேளை பிராந்திய தலைவர்களுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இதேபோன்ற கருத்தையே கூறியுள்ளார். தேசிய ரீதியிலான பேச்சுவார்த் தைகள் மூலம் உண்மையான ஜனநாய கத்தை பின்பற்ற எகிப்திய மக்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும்.
அதுதான் ஆரம்பம். என்ன நடைபெற வேண்டுமோ அதன் அடிப்படை ஆரம்பம் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஹிலரி கிலிண் டன் கூறியுள்ளார். எகிப்துக்கு அமெரிக்கா வருடாந்தம் வழங்கி வரும் 1.3 பில் லியன் டொலர் இராணுவ நிதி உதவி குறைக்கப்படுமா. இல்லையா என்பது பற்றி கிளிண்டன் குறிப்பிட வில்லை. இப்போதைக்கு அந்த விடயம் அவசியமானதல்ல என்று மட்டும் கூறினார்.

0 commentaires :

Post a Comment