தெற்கு சூடானில் நேற்று நடைபெற்ற மக்கள் அபிப்பிராய தேர்தலை அடுத்து தெற்கு சூடான் வடக்கு சூடானில் இருந்து பிரிந்து சுதந்திரத்தை பிரகடனம் செய்வதென்ற தீர்மானத்தை தன்னிச்சையாக எடுத்துள்ளது.
தெற்கு சூடானின் தலைநகரமான ஜுபாவில் வடக்கு சூடானில் இருந்து பிரிந்து விடுவது பற்றிய தீர்மானம் எடுப்பதற்காக நடத்தப்பட்ட அபிப்பிராய வாக்கெடுப்பில் இந்த யோசனையை ஆதரித்து 98.83 வாக்குகள் கிடைத்ததை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் தெற்கு சூடான் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கரகோசம் செய்து ஆடியும் பாடியும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
தெற்கு சூடான் மக்கள் வாக்களித்து தங்கள் நாட்டை வடக்கிலிருந்து விடுவித்து சுதந்திரப் பிரஜைகளாக மாறியிருப்பதாக தெற்கு சூடான் ஜனாதிபதி சல்வா கிர் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் உரையாற்றிய போது தெரிவித்தார்.
2005 ம் ஆண்டில் வடக்கு சூடானுக்கும் தெற்கு சூடானுக்கும் இடையில் இருந்து வந்த நீண்டகால சிவில் யுத்தத்தை நிறுத்துவதற்காக சமாதான உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்பட்டது. சமாதானம் ஏற்படுத்தப்படும் வரையில் இந்த சிவில் யுத்தத்தினால் 20 இலட்சம் மக்கள் உயிர் துறந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி சல்வோர் கிர் மக்கள் விடுதலை இயக்கத்தின் முன்னாள் போராளியாவார். அவர் தனது முன்னாள் எதிரியான சூடான் ஜனாதிபதி உமர் ஹசன் அல் பkருடன் 2005 இல் சமாதான உடன்பாட்டுக்கு இணக்கம் தெரிவித்தமைக்காக அன்று பாராட்டப்பட்டார். இந்த உடன்படிக்கையின் படி தெற்கு சூடான் எதிர்வரும் ஜுலை மாதம் 9 ஆம் திகதியன்றே சுதந்திரப் பிரகடனத்தை சட்ட பூர்வமாக செய்ய முடியும்.

0 commentaires :
Post a Comment