மியான்மர் வரலாற்றில், 20 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முன்தினம் முதன் முறையாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. இந்த முதல் கூட்டத்தில், நாட்டின் புதிய அரசியல் சாசனம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. 50 ஆண்டுகளாக நாட்டில் நிலவி வந்த இராணுவ ஆட்சி முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம் நாடு முழுவதும் நேற்று முன்தினம் 14 மாகாண சட்ட சபைகளும் முதன் முறையாகக் கூடின.
மியான்மரில் 1962ல் இருந்து இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்தாண்டு நவம்பர் 7ம் திகதி பொதுத் தேர்தல் நடந்தது. இதில் சூங் சாங்சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி கலந்துகொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளில் இராணுவத் தலைமையால் இயக்கப்படும் ஐக்கிய ஒன்றுமை மற்றும் மேம்பாட்டுக்கட்சி (யு.எஸ்.டி.பி.,) பெரும்பான்மை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முன்தினம் முதன் முதலாக அந்நாட்டு பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியது. மொத்தம் 440 இடங்கள் கொண்ட கீழ்ழவையும், 224 இடங்கள் கொண்ட மேலவையும் ஒரே நேரத்தில் நேற்று முன்தினம் காலை தொடங்கின. பெரும்பான்மையான இடங்களில் யு.எஸ்.டி.பி. கட்சி உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆங் சாங் சூச்சி கட்சி தேர்தலில் பங்கேற்காததால் அதன் உறுப்பினர்கள் யாரும் இடம்பெறவில்லை. கூட்ட நடவடிக்கைகளைப் பார்வையிட பத்திரிகையாளர்கள் அரசியல் நிபுணர்கள், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கமரா கைத்தொலைபேசி, கணனிகள், ஒலிநாடா உள்ளிட்ட பிற இலத்திரனியல் பொருட்களை பாராளுமன்றத்திற்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. பாராளுமன்றின் இந்த முதல் கூட்டம், இரண்டு வாரங்களுக்கு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் 14 மாகாண சட்டசபைகளும் நேற்று முன்தினம் முதன் முறையாகக் கூடின. அவற்றிலும் பெரும்பான்மை உறுப் பினர்களாக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே இடம்பெற்றனர்

0 commentaires :
Post a Comment