மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச மாநகரங்களுக்கிடையிலான கபடிச் சுற்றுப் போட்டியில் கலந்துகொள்ளவென கிழக்கு மாகாண கபடிக் கழகம் எதிர்வரும் 16ஆம் திகதி மலேசியா பயணமாகவுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை அமைச்சர் எம். எஸ். சுபைர் தலைமையில் பயணமாகவுள்ள கபடிக் குழுவில் 12 வீரர்கள் இடம்பெறுகின்றனர்.
அத்துடன் கிழக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் உதவிப் பணிப்பாளர் எம். ஏ. ஜஸ்டின் பெரேரா, திருமலை மாவட்ட விளையாடடு அதிகாரி ஏ. எச்..விமலசேன மற்றும் அமைச்சரின் பிரத்தியேக செய லாளர் எஸ். எம். தெளபீக் ஆகியோரும் கபடிக் குழுவுடன் பயணிக்கி ன்றனர்.
கோலாலம்பூர் கே. எல். பெட்மின்டன் அரங்கில் 17ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இச் சுற்றுப் போட்டி மலேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏ. கோகிலன் பிள்ளையின் தலைமையில் நடைபெறவுள்ளது.
கோலாலம்பூர் கபடிச் சம்மேளனத்தின் ஏற்பாடில் இடம்பெறவுள்ள இச் சர்வதேச சுற்றுப் போட்டியில் 5 நாடுகளைச் சேர்ந்த 18 நகரக் கழகங்கள் பங்குபற்றவுள்ளன.
உலகின் பிரபல்யமிக்க கபடிக் கழகங்களும், வீரர்களும் பங்குபற்றவுள்ள இச் சுற்றுப் போட்டியில் எமது நாட்டின் கிழக்கு மாகாண கபடிக் கழகம் பங்குபற்றுவதானது நாட்டுக்கும், விளையாட்டுத் துறைக்கும் கிடைத்த மிகப்பெரியகெளரவமென கிழக்கு சுகாதார விளையாட்டுத் துறை அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.
அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற கபடிச் சுற்றுப் போட்டியில் முதலிடத்தை பெற்றுக் கொண்ட கிழக்கு மாகாண கபடிக் குழுவின் 6 தேசிய கபடி வீரர்களும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கோலாலம்பூர் சர்வதேச கபடிச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ள கிழக்கு மாகாண கபடிக் கழக வீரர்களின் பெயர்கள்:
1. பி. டபிள்யு. இசுறுநுவன்
கபில பண்டார
2. எஸ். சி. இரங்க
3. ஆர. சஹீவன்
4. எஸ். ஜி. என். குனதிலக
5. பி. எல். சமன்குமார
6. ஆர். ஜே. சிறிவர்தன.
7. என் கே எஸ். என். தஸநாயக்க
8. கே. சினோதரன்
9. கே. சங்க பெரேரா
10. எச். எஸ். முடித் ஹங்கலகே
11. ஜே. டி. ரொசைரோ
12. டி. ஜி. ஏ. லங்கா

0 commentaires :
Post a Comment