புதிய ஜனாதிபதி ஏற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து துனிசியாவில் கலவரம் மூண்டுள்ளது. இதனால் கடைகள் மற்றும் வீடுகளில் கொள்ளைச் சம்பவம் நடக்கிறது. ஆபிரிக்க நாடான துனிசியாவில் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் ஷின் எல் அபிடின் பென் அலி (74) ஜனாதிபதியாக இருந்தார். இவரது 23 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்தது. வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்தாடியது.
இதனால் வெகுண்டெழுந்த மக்கள் அவர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதற்கிடையே அவர் பதவி விலகக்கோரி துனிஷ் நகரில் லட்சக்கணக்கான மக்கள் கண்டன பேரணி நடத்தினார்கள்.
எனவே, பென் அலி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறினார். பிரான்ஸ் சென்ற அவருக்கு அங்கு தங்க அனுமதி அளிக்க வில்லை. எனவே அவர் சவூதி அரேபியா சென்று தஞ்சமடைந்தார். பென் அலி பதவி விலகியதை தொடர்ந்து இடைக்கால ஜனாதிபதியாக பாராளுமன்ற சபாநாயகர் போயத் மபாஷா நேற்று பதவி ஏற்றார்.
இதற்கும் துனிசியா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய ஜனாதிபதியை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். நியமிக்கப்பட்டவர் பதவி வகிக்கக்கூடாது. எனவே, உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கலவரத்தில் ஈடுபட்டனர். கடைகள், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கொள்ளையடிக் கப்பட்டன. வன்முறை கும்பல்கள் வீடுகளுக்குள் புகுந்தும் கொள்ளையில் ஈடுபட்டன.
பொது சொத்துக்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கலவரத்தை ஒடுக்க பொலிஸாரும், இராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டனர். துனிசியா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கலவரத்தை கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே நாட்டில் அமைதியை ஏற்படுத்தவே தான் இடைக்கால ஜனாதி பதியாக பதவி ஏற்று இருப்பதாகவும் மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் மபாசா கேட்டுக் கொண்டுள்ளார்.
விரைவில் தேர்தல் நடத்தி புதிய ஜனாதி பதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அவர் கூறினார். தற்போது அனைத்து கட்சிகள் அடங்கிய தேசிய அரசு அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment