கடந்த ஒரு மாத காலமாக இலங்கையில் தொடரும் பெருவெள்ளத்தினால் பெருமளவில் கிழக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாடசாலைகளிலும் பொதுக்கட்டிடங்களிலும் உணவு, உடை இன்றி இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கின் காரணமாக போக்குவரத்து தடைகளும் பாரியளவில் ஏற்பட்டுள்ளதால் நிவாரணப்பணிகள் மிகவும் தாமதமாகவே நடைபெறுகின்றன. இந்நிலையில் பலவிதமான மனிதாபிமானப் பணிகளிலும் பலரும் ஈடுபட்டுள்ளனர். இப்பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அகதிகளாய் உள்ள எமது மக்களுக்க எம்மாலான உதவிகளை செய்வதற்காக ஐனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியினரான நாம் ஈடுபட்டு வருகிறோம். எனவே கிழக்கு மாகாண மக்களின் நிர்கதியான இந்நிலையில் அவர்களுக்கு உதவ முன்வருபவர்களை எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கின்றோம்.
ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி
தொடர்புகட்கு: M.R.Stalin (ஞானம்) : 0033625892015
France
kilakku@hotmail.com
0 commentaires :
Post a Comment