1/06/2011

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம் ** வாழ்த்துகின்றோம்

 



சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் அங்குரார்ப்பணம்.

புத்தாண்டு மலர்ந்ததும் இலங்கை தலை நகர் கொழும்பில் தமிழ் கலை, இலக்கியவாதிகள், படைப்பாளர்கள் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆய்வறிஞர்கள் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 பன்னிரண்டு அரங்குகளில் நடைபெறவுள்ளது.
தமிழாராச்சி மாநாட்டிற்கு வித்திட்ட ‘தமிழ் தூது’ தவத்திரு தனிநாயகம் அடிகளார் அரங்கில் தனது முதலாவது அரங்கை நடத்தவிருக்கிறது. எதிலும் முதலாவது என்ற பெருமையை தனதாக்கிக் கொண்ட இலங்கை மண்ணில் இவ்வாறு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெறுவது சாலவே பொருத்தமாகும்.
சர்வதேச அளவில் தமிழ் பேசும் மக்களின் இடப் பெயர்வு, புலம் பெயர்வு என்று இடம்பெற்றிருந்தாலும் 70களுக்கு பின்னரான காலப்பகுதியில் நடைபெற்ற இலங்கை தமிழ் பேசும் மக்களின் புலம் பெயர்வு காரணமாகவே தமிழ் இலக்கியத்தில் “புலம்பெயர்வு இலக்கியம்” அல்லது “புகலிட இலக்கியம்” என்ற ஒரு கூறு முனைப்பு பெற ஆரம்பித்து அதன் பயனாக இன்று உலகில் 40 க்கு மேற்பட்ட மேற்கத்திய நாடுகளில் தமிழ் மொழியில் எழுதும் தமிழ் படைப்பாளர்கள் தாங்கள் வாழும் நாட்டின் இலக்கியங்களை தமிழ் மொழியில் கொண்டு வரும் முயற்சிகளிலும் புலம் பெயர்வு மக்களின் இரண்டாம் தலைமுறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் தொடர்ச்சியான வன்முறை கலாசாரம் நடைமுறையுடன் வாழ்ந்த எம் மக்களிடையே பதகளிப்பு, மனச் சோர்வு, மனவடு, நடத்தை கோளா றுகள் என்பன உள ரீதியாக அதீத பாதிப்பை எற்படுத்தியிருக்கின்றன. சமூக விழுமியங்கள் அழிந்து போகா வண்ணம் மக்களை மீட்சிபெற தமது கலாசார நிகழ்வுகளை மீட்டுவதன் மூலமே தீர்க்க முடியும்.
அவற்றுக்கு தேவையான வகையில் மக்களை மனதளவில் ஆற்றுப்படுத்தி நிலையான ஆற்றல் மிக்கவர்களாகவும், கலாசார விழுமியங்களை கடைப்பிடிப் பதற்குரிய ஆரோக்கியமானவர் களாகவும் மாற்றுதல் இன்றியமை யாததாகும். அதற்கு இவ்வாறான சமூக விழுமியங்களை வெளிப் படுத்தும் தமிழ் இலக்கிய, கலாசார மரபு சார்ந்த நிகழ்வுகள் அவசிய மாகும்.
இவற்றை கருத்தில் கொண்டே கலை இலக்கியங்களுடனான மக்கள் மனதை வென்றெடுக்கும் நோக்கில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்த இச்சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றியம் எடுத்த முயற்சிகளே இன்று மாநாடு நடைபெறும் கட்டத்தை அடைந் திருக்கின்றது.
இம்மாநாட்டின் பிரதான அமைப்பாளர் அவுஸ்திரேலியா வாழ் லெ. முருகபூபதி கருத்து தெரி விக்கையில், இன்று இந்நாட்டில் வடகிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களும், இதே பிரதேசத்திலும் தென்னிலங்கையிலும் வாழும் முஸ்லிம் மக்களும், மலையகத்தில் வாழும் மக்களும் தமிழ் பேசும் மக்களாவர்.
மதத்தினால் வேறுபட்டிருந்த போதிலும் இவர்களது பேசும் மொழியாகவும் எழுதுவும் மொழி யாகவும் தமிழே விளங்குகின்றது. இம் மக்களிடம் தமிழ் கலை, இலக் கிய எழுத்தூழியத்தில் ஈடுபடும் படைப்பாளிகளும் இதழியல்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் மொழி அடிப்படையில் சமூக விழிப்புணர்வுகளையும், புரிந் துணர்வு ஒற்றுமையையும் நடை பெறவுள்ள சர்வதேச எழுத்தாளர் மாநாடு ஏற்படுத்தும் என்றார்.
நடைபெறவுள்ள மாநாட்டில் இலங்கையின் பல பாகங்களிலு மிருந்து பேராளர்கள் கலந்து கொள்கின்றனர். மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, வன்னி, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், அநுராதபுரம் உட்பட மலையகத்திலும் பல பிரதேசங்களிலிருந்தும், தென்னிலங்கை மற்றும் வடமேற்கு பகுதிகளிலிருந்தும் சுமார் முந்நூறு பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
அத்துடன் அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், தமிழ்நாடு முதலான பல வெளிநாடுகளிலிருந்தும் பல படைப்பாளிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்த் தூது தனி நாயகம் அடிகள், ஆறுமுகநாவலர், சுவாமி விபுலானந்தர், அருள்வாக்கி அப்துல் காதர், எம்.எம். உவைஸ், பேராசிரியர்கள் சு. வித்தி யானந்தன், க.கைலாசபதி, பத்திரி கையாளர் எஸ்.டி.
சிவநாயகம், படைப்பாளிகள் இலங்கையர் கோன். கே. டானியல், வரதர், கலையரசு சொர்ணலிங்கம், சோமசுந்தரப்புலவர், இலங்கையில் இதழியல் முன்னோடி தேசபக்தன், கோ. நடேசய்யர் ஆகியோரது நினைவாக கருத்தரங்கு, கலை அரங்குகளின் அமர்வுகள் இம் மாநாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இம்மாநாட்டின் இலங்கை இணைப்பாளர் வைத்திய கலாநிதி தி. ஞானசேகரன் தலைமையில் மாநாட்டு அமைப்புக்குழுவில் அமைப்பு செயலாளராக கவிஞர் அஸ்ரப் சிஹாப்தீன் இயங்குகிறார்.
மொழிப் பெயர்ப்பு, உலக இலக்கியம், சிறுவர் இலக்கியம் படைப்புகளில் ஊடகத்தில் செவ்விதாக்கம், சிற்றிதழ், வலைப்பதிவு, பெண்ணியம், குறும்படம் உட்பட பலதுறைகளில் நடத்தப்படும் அமர்வுகளில் இலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பேராளர்கள் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றுவார்கள்.
முதல் மூன்று நாட்களும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலும் இறுதி நாளன்று இராம கிருஸ்ண மிஷன் மண்டபத்திலும் மாலை வேளைகளில் நடைபெறவுள்ளன. கலை நிகழ்ச்சிகளில் உள்ளூர் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும், நாடகம், நாட்டுக்கூத்து நிகழ்வுகளும் நடைபெறும்.
இறுதி நாளன்று 09.01.2011 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தமிழ்ச் சங்கத்தில் படைப்பு இலக்கியம், ஊடகத்தில் செவ்விதாக்கம் அரங்கு நடைபெறவுள்ளது.
குறிப்பிட்ட இவ்வரங்கு பயிற்சி பத்திரிகையாளர்களுக்கும், ஊடகவியலா ளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே பத்திரிகை உலக நண்பர்கள் கட்டாயம் பங்குபெறவேண் டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இம்மாநாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் தரமான குறும் படங்கள், ஆவணப்படங்கள் தொடர்பான பிரக்ஞையை வளர்ப்பதற்காக குறும்பட அரங்கும் நடைபெறுகின்றன. முன்னணி படைப்பாளியும் தமிழகத்தில் பத்ம ஸ்ரீ விருது மற்றும் இலக்கிய விருதுகளைப் பெற்ற மூத்த படைப்பாளி ஜெயகாந்தனின் வாழ்வையும், பணிகளையும் சித்தரிக்கும் ஆவணப் படமும் காண்பிக்கப் படவிருக்கிறது.
இதனை தயாரித்து இயக்கியிருக்கும் கலைஞர் ‘கனடா’ மூர்த்தி சிங்கபூர் பொது நூலகத்தில் தற்போது பணியாற்றுகிறார். இலங்கையரான இவர் ஜெயகாந்தனின் நீண்டகால நண்பராவார்.
பேராசிரியர் கா. சிவத்தம்பியின் கருத்துரைகளும் இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறுவர் இலக்கிய அரங்கில் அவுஸ்திரேலியாவில் பிறந்து தமிழ் குழந்தைகள் தமிழ் பேசி நடித்த ‘பாப்பா பாரதி’ என்னும் குழந்தை நாடகமும் நடைபெறவுள்ள இதனை நாடக கலைஞர் எழுத்தாளர் மாவை நித்தியானந்தன் தயாரித்து வருகிறார்.
இம்மாநாடு தொடர்பான மேலதிக தகவல்களை             0112586013       என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.               
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இன்று 6ம் திகதி காலையில் ஆரம்பமாகின்றது.மாநாடு நடை பெறும் வெள்ளவத்தை தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள உருத்திரா மாவத்தை கொழும்பு காலி வீதியில் ஆரம்பமாகும் இடத்திலிருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர் கள் பங்குபற்றும் ஊர்வலத்துடன் ஆரம்ப மாகும்.
இம்மாநாடு எதிர்வரும் 9ம் திகதி வரையும் நான்கு நாட்கள் நடைபெற விருக்கின்றது.
இம்மாநாட்டில், நாட்டின் பல பாகங்களி லிருந்தும் எழுத்தாளர்களும், கலைஞர்களும், ஊடகவியலாளர்களும் பங்குபற்றவுள்ளனர்.
அதேநேரம் அவுஸ்திரேலியா, இந்தியாவின் தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி உட்பட பல நாடுகளிலி ருந்தும் தமிழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளுகின்றனர்.
தினமும் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரையும் ஆய்வரங்குகள் நடைபெறும். பிற்பகல் 5.00 மணி முதல் இரவு 8.00 வரையும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஆய்வரங்குகள் கணனி வலைப்பதிவு, ஈழத்து தமிழ் இலக்கியம், ஆவணப்படுத்தல், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சிற்றிதழ், மகளிர் அரங்கு, உலக தமிழ் இலக்கியம், செவ்வித்தாக்கம், நிகழ்த்து கலைகள், பல்துறை ஆகிய தலைப்புகளின் கீழ் நடைபெறும்.
இறுதி நாள் நிகழ்வு வெள்ளவத்தை இராம கிருஷ்ண மிஷன் மண்டபத்தில் மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணிவரை நடைபெறும்.

0 commentaires :

Post a Comment