மன்னார் கடற்படுகையில் தொடர்ந்தும் எண்ணெய் அகழ்வு தொடர்புடைய ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. மன்னார் கடற்படுகையில் இந்த எண்ணெய் ஆய்வுகளை நடத்துவதற்கான கேள்விப்பத்திரங்கள் இம்மாத இறுதிக்குள் பூர்த்தியடைந்துவிடும். அதன் பின்னர் அங்கு உட்கட்டமைப்புப் பணிகளை நிறைவேற்றி வைத்ததும், எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி எண்ணெய் அகழ்வு ஆய்வுகள் ஆரம்பிக்கப்படும்.
இந்தத் தகவலை பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நீல் டி சில்வா தெரிவித்தார்.
இந்தக் கேள்விப் பத்திரங்களைப் பரிசீலனை செய்து அதில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சந்தைப்படுத்தல் ஆலோசகர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மன்னார் கடற்படுகையின் பல்வேறு பகுதிகளில் எண்ணெய் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது.
ஜனவரி மாத முடிவில் கேள்விப் பத்திரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக பிரதான நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும்.
கெயின்ஸ் லங்கா நிறுவனம் இன்று எண்ணெய் அகழ்வு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்களையும் சேவைகளையும் வழங்கி அங்கு பணிகளை துரித வேகத்தில் மேற்கொள்ள உதவி வழங்கி வருகின்றது.
இந்த நிறுவனம் மன்னார் கட ற்படுகையில் உள்ள மூன்று பாரிய எண்ணெய் கிணறுகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும் பணியை ஏற்றுக்கொண்டுள்ளது.
கேன்ஸ் லங்கா நிறுவனம் இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆழ்கடலில் பணி புரிபவர்களுக்கென உணவு போன்ற பொருட்களையும் ஏனைய அத்தியாவசிய வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்காக கப்பல்களை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்துவதற்கும், எண்ணெய் அகழ்வு மற்றும் ஆய்வுப் பணிகளையும், காலநிலை பற்றி முன்கூட்டியே அறிவிப்பதற்கான பணிகளையும் சரியான முறையில் செய்வதற்கான உப ஒப்பந்தக்காரர்களையும் சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.
இந்த எண்ணெய் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுப வர்களுக்கு எரிபொருள் நீர், மற்றும் வைத்திய வசதிகளும் இந்த உப ஒப்பந்தக்காரர்களால் செய்யப்படும்.

0 commentaires :
Post a Comment