1/04/2011

மட்டக்களப்பு திருமறைகலா மன்றத்தின் “கலைச்சங்கமம்”

மட்டக்களப்பு திருமறைகலா மன்றத்தின் “கலைச்சங்கமம்”.

dsc09888
மட்டக்களப்பு திருமறைகலா மன்றத்தின் வருடாந்த “கலைச்சங்கமம்”நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
அழிவுக்குள்ளாகிவரும் பாரம்பரிய கலையினை வளர்க்கும் முகமாகவும் இலைமறை காயாவுள்ள இளம் கலைஞர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதற்காகவும் வருடாந்தம் இந்த நிகழ்வை நடாத்திவருகின்றது.
தமிழ் -சிங்கள உறவை வலுப்படுத்துமுகமாக இந்த நிகழ்வில் சிங்கள இளைஞர் யுவதிகளின் நடன நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டமை சிறப்பம்சமாகும்.
கிழக்கு மாகாணத்தின் அழிவுக்குள்ளாகிவரும் பல கலைகள் இங்கு மேடையேற்றப்பட்டமை பலரது பாராட்டையும் பெற்றது.
அத்துடன் தம்முள்ள ஆற்றல்களை மறைத்துவைத்திருந்த பல இளம் கலைஞர்களுக்கு இங்கு தமது ஆற்றல்களை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
 dsc09878
dsc09849

0 commentaires :

Post a Comment