1/03/2011

ஐவரிகோஸ்ட்டில் ஐ.நா. படையினர் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நிலைமை மோசமடையுமுன் வெளியேற பக்போ உத்தரவு

ஐ. நா. அமைதிப் படையினர் அப்பாவிப் பொது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ள ஐவரிகோஸ்ட் ஜனாதிபதி பக்போ நாட்டைவிட்டு ஐ. நா. படைகள் உடனடியாக வெளியேற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய சர்ச்சைக்குரிய ஜனாதிபதி பக்போ ஐ. நா. படைகள் ஐவரிகோஸ்ட் அப்பாவி மக்களை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர்.
இவர்களை நீங்கள் நேரடியாகச் சென்று பார்வையிடலாம். ஐவரிகோஸ்ட்டில் அமைதியை உண்டாக்க ஐ. நா. படைகள் உழைக்கவில்லை. மாறாக பெரும் போரையே மூட்டிவிடுகின்றனர். இதை எக்காரணம்கொண்டும் ஏற்க முடியாது அப்பாவிகளைக் கொல்லும் ஐ. நா. படைக்கு இங்கு வேலையில்லை. இதனாலேயே அவர்களை வெளியேறுமாறு கேட்கின்றேன்.
இந்நிலைமைகள் தொடர்ந்தால் பாரிய விபரீதங்கள் ஏற்படும் என்றும் எச்சரித்தார். இதை நிராகரித்த ஐ.நா. ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிடுவோருக்கெதிராகவே அமைதிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக அறிவித்துள்ளது. ஐவரிகோஸ்டில் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது தற்போதைய ஜனாதிபதி பக்போ எதிர்க்கட்சி வேட்பாளர் குவற்றா ஆகியோர் போட்டியிட்டனர்.
வெற்றியை இருவரும் உரிமை கொண்டாடினர். எனினும் வெளிநாடுகள் குவற்றோவின் வெற்றியையே ஆதரித்தன. மத்திய வங்கியுட்பட ஏனைய நிறுவனங்களை குவற்றாவுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளன.
இதனால் ஐவரிகோஸ்ட்டில் நிர்வாகம் சீரழிந்துள்ளது அரச இயந்தரங்களை இரண்டு வேட்பாளர்களும் தேவைக்கேற்றாற்போல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். ஐவரிகோஸ்ட்டில் 9 ஆயிரம் ஐ. நா. படைகள் உள்ளன. இதில் பிரான்ஸின் இராணுவம் 900 ரம் உள்ளது. பிரான்ஸே இங்குள்ள படைகளுக்குத் தலைமையேற்றுள்ளன. பிரான்ஸ் படைகளையும் வெளியேறுமாறு பக்போ உத்தரவிட்டுள்ளார்

0 commentaires :

Post a Comment