1/14/2011

மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முகாம்களுக்கு கிழக்கு முதல்வர் நிவாரணங்கள் வழங்கி வைப்பு.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முகாம்களில் தங்கிருக்கின்ற மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார். குழந்தைகளுக்கான பால்மா மற்றும் பிஸ்கட், பாய்,  உலர் உணவுப் பொருட்கள் என்பவற்றை முதல்வர் சந்திரகாந்தன் வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களும் இணைந்து கொண்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முகாம்களுக்கு நேரில் சென்று, அங்குள்ள மக்களுடன் உரையாடி, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து கொள்வதனையும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வைப்பதனையும் படங்களில் காணலாம்.
மட்/ ஆரையம்பதி இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் உள்ள மக்களுடன் முதலமைச்சர்  சந்திரகாந்தன் உரையாடுவதனையும் நிவாரணப் பொருட்களை வழங்குவதனையும் படங்களில் காணலாம்.
_mg_0067

0 commentaires :

Post a Comment