மழை வெள்ளத்தினால் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் 27 முகாம்களில் சுமார் 3 ஆயிரத்து 150 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 100 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தின் அனைத்துப்பகுதிகளும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து கிராமங்களிலும் இடைத்தங்கள் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.அருள்ராஜா தெரிவித்தார்.
இதில் களுவாஞ்சிகுடி, மகழூர், எருவில், குருமண்வெளி, ஓந்தாச்சிமடம், கல்லாறு, துறை நீலாவணை ஆகிய பகுதிகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள முகாம்களுக்கு சென்ற மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பாதிக்கப்பட்ட மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். மேலும் உணவு வழங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வின் பணிப்புரைக்கேற்ப முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்
0 commentaires :
Post a Comment