1/10/2011

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் ஒருவாரம் மூடப்படும்

_mg_9223மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழைவெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பலவேறு பிரதேசங்களிலுpருந்தும் இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளமையினாலும் மாணவர்கள் கல்வி கற்பதற்கேற்ற சூழல் இன்மையாலும் தொற்று நொய்கள் பரவும் என்ற அச்சத்தினாலும் நாளை திங்கட்கிழமையிலிருந்து தொடர்நது 5நாட்கள் பாடசாலைகள் மூடப்படவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 இன்று மட்டக்களப்பு மாவட்தின் வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டம் மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்ற போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment