1/10/2011

தொடாந்து மழை பெய்தால் அவசரநிலை பிரகடணப்படுத்தப்படும். .


.
dsc00980கிழக்கில் தொடர்ந்து பெய்து வரும் மழை மேலும் ஓரிரு நாட்கள் தொடருமானால் விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அவசரநிலை பிரகடணப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.
கிழக்கில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில்  இடம்பெற்றது. இக் கூட்டத்திற்கு விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் கலந்து கொண்டார்கள். குறிப்பாக கிழக்கு மானகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி. முரளிதரன்,மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம். எல். ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்களத்தலைவாகள், பாதுகாப்புப் பிரிவினர்கள், கல்வி அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் நிவாரணங்கள் துரிதமாக வழங்கப்படுவது மற்றும் போக்குவரத்து தடைப்பட்டிருக்கின்ற பிரதேசங்களல் சிக்கிக் கொண்ட மக்களை மீட்பது மற்றும் அம் மக்களுக்கான தற்காலிக தங்குமிடம் தயர்படுத்தல் அத்தோடு அவர்களுக்கான உலர் உணவுகளை வழங்குவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு அதற்குப் பொறுப்பாக ஒவ்வொரு பிரதேச செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
dsc00969
dsc00975

0 commentaires :

Post a Comment