நாவலடி கிராம மக்கள் வெள்ளத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது இவர்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இம் மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களை கிழக்கு மாகாண முதலமச்சர் சந்திரகாந்தன் வழங்கி வைத்தார். முதலமைச்சரது நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்படி நிவாரணங்கள் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும். சுமார்165 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி. சந்திரகாந்தன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி க. பத்மராஜா அவர்களும் இணைந்து கொண்டார்.
0 commentaires :
Post a Comment