இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளுக்கான ஏற்றுமதிகள் தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நிறுத்திக்கொள்ளப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அத்துடன் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கிரமமாக திட்டமிடும் நாடுகளின் பட்டியலிட இந்தியாவையும் பராக் நிர்வாகம் சேர்த்துள்ளது.
இதன்படி ஒரு காலத்தில் நிராகரிக்கப்பட்ட நாடாக இருந்த இந்தியா தற்போது சர்வதேச ரீதியில் ஆயுத கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இடம்பிடித் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கூறியவாறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை அமெரிக்க நிறுவனங்களும் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளில் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தெற்காசியாவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளேக் கூறியுள்ளார்.
நியூயோர்க்கின் சைரக்கூல் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் ரொபர்ட் பிளேக் உரையாற்றினார். அப்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் 1998 இல் இந்தியா மீது கட்டுப்பாடுகளை விதித்தன. அணு சோதனைகளை நடத்தியதன் மூலம் முழு உலகத்தையும் இந்தியா அதிர்ச்சிக்குள்ளாக்கியதையடுத்தே அமெரிக்கா இவ்வாறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தியா அணு சோதனை நடத்திய சில நாட்களுக்குள் பாகிஸ்தானும் அணு சோதனை நடத்தியது.
எனினும் அமெரிக்கா மீண்டும் இந்தியாவுடன் சமாதானத்துக்கு வந்தது. இதனையடுத்து 2008இல் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷ¤ம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டனர்.
அணு சக்தி விடயங்களில் ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் கூறியிருந்தது. எனினும் அப்போதும்கூட அணு பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திட மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இந்தியாவின் விமானப்படையில் உள்ள பழைய விமானங்களுக்கு பதிலாக புதிய விமானங்களை விற்கும் முயற்சியிலும் அமெரிக்கா இறங்கியுள்ளது.
இந்த முயற்சியின் ஒரு அங்கமாக அமெரிக்க வர்த்தக செயலாளர் கெரி லொக் அடுத்த மாத முற்பகுதியில் இந் தியா வருகிறார். அமெரிக்க - இந்திய வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் இவரது விஜயம் திட்ட மிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 24 வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய வர்த்தக குழுவொன்று அவருடன் கூடவே இந்தியா வருகிறது
0 commentaires :
Post a Comment