1/22/2011

Rural Economic and Community Development Organization. (RECDOபாடசாலை உபகரணங்களுக்கான வேண்டுகோள்


கடந்த வார வெள்ள அனர்த்தத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டதனை நாம் அனைவரும் அறிந்ததே. இதற்காக பல்வேறு அமைப்புக்களும் தனிநபர்களுமாக தங்களால் முடியுமான பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார்கள். மேற்படி எமது அமைப்பும் அவசர நிலைகளுக்கான உதவிகளை தமது தொண்டர்கள் மூலம் மிகச் சிறப்பாக மேற்கொண்டது. அடுத்த நடவடிக்கையாக மக்களுக்கு பல்வேறு தேவைகள் காணப்பட்டாலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் பாடசாலை உபகரணத் தேவைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படவேண்டியதாகும் அதற்காண இடைவெளி காணப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. மேற்படி எமது அமைப்பு திருகோணமலை மாவட்டம் தழுவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கத் தீர்மானித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக விருப்பமானவர்களிடம் உதவிகளையும் எதிர்பார்க்கின்றது. இதற்காக பின்வருவோரிடம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அஸார் - 0777073441     நேதாஜி – 0776199801    அவ்பான் - 0779225187
Rural Economic and Community Development Organization. (RECDO).
204C, Peraru-01, Kantale. Sri Lanka.

0 commentaires :

Post a Comment