பிரிந்தால் சகோதர நாடொன்றைக் கட்டி எழுப்ப உதவுவோம்.இணைந்தால் பலமிக்க சூடானை உலகிற்கு அறிமுகஞ் செய்வோம்
ஒமர் அல் பஷிர்
சூடானின் தென்பகுதி வடக்குடன் இணைந்து இயங்குவதா, பிரிந்து செல்வதா என்பதற்கான ஆணையை மக்களிடம் கோரும் சர்வஜன வாக்கெடுப்பு நேற்று 05ஆம் திகதி ஆரம்பமானது. இதில் தென் பகுதி மக்கள் வாக்களித்தனர்.
சூடானின் வடபகுதிக்கு ஒமர் அல் பஷிர் ஜனாதிபதியாக உள்ளார். தென் பகுதிக்கு சல்வாகிர் ஜனாதிபதியாகக் கடமையாற்றுகின்றார். தென்பகுதி மக்களில் சிலர் வடக்குடன் இணைந்து செயற்பட விரும்பும் அதேவேளை இன்னும் சிலர் பிரிந்து செல்ல விரும்புகின்றனர். தென் பகுதியில் பல ஆயுத அமைப்புக்களும் போராடுகின்றன.
டர்புர் போராளிகள் இதில் விசேடமானவர்கள். டர்புர் பிரச்சினையை ஒமர் அல் பஷிர் கையாண்ட விதம் பாரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளதுடன் சர்வதேச நீதிமன்றம் பிடியாணையும் பிறப்பித்துள்ளது. சூடானின் தென்பகுதி பிரச்சினைகள் தொடர்பாக அண்மையில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ஒமர் அல் பஷிர் தென்பகுதி சூடான் சகோதரர்களின் மன உணர்வுகளைக் கெளரவிக்கவுள்ளோம். விரும்பினால் இணையலாம். இல்லாவிட்டால் பிரியலாம்.
பிரிந்தால் சகோதர நாடொன்றைக் கட்டி எழுப்ப உதவுவோம். இணைந்தால் பலமிக்க சூடானை உலகிற்கு அறிமுகஞ் செய்வோம் எனத் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பமானது. இதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தென் சூடானில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள போதும் அரபு மொழி பேசும் முஸ்லிம்களும் கணிசமானளவு உள்ளனர்.
2003ம் ஆண்டிலிருந்து இங்கு மிக மோசமான மோதல்கள் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. டர்புர் போராளிகளுடன் கட்டாரில் பேச்சுவார்த்தையொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் விபரங்கள் வெளியாகவில்லை. சூடானின் அரசியல், அதிகார நிலைமைகள் நான்கு துருவங்களாகப் பிரிந்துள்ளன
0 commentaires :
Post a Comment