1/24/2011

ஈரான் அணு விவகாரம்; ஆறு நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வரும் ஈரானின் அணுவிவகாரம் தொடர்பாக ஈரானுடன் ஆறு உலக நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடித்துள்ளது.
யுரேனியத்தை செறிவாக்கும் நடவடிக்கைகள் கைவிட முடியாதென ஈரான் கூறியதையடுத்து இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது.
பேச்சுவார்த்தைக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வுகளை பார்க்கும் போது இப்பேச்சுவார்ததை தோல்வியில் முடிந்தது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதே என்று உள்ளூர் ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தனது மக்களுக்கான வசதிகளுக்காக அணு உலைகளுக்கான எரிசக்தி உள்ளிட்டு சமாதான அணு திட்டத்தை கைவிட ஈரான் தயாராக இல்லை என்று தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கற்கை நிறுவனத்தின் ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இதேவேளை மேற்கு நாடுகளின் அழுத்தங்களுக்கு பணிந்து ஈரான் தனது அணுக்கொள்கைகளை இம்மியளவேனும் மாற்றிக்கொள்ளாது என்று ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹமெதி நெஜாட் கடந்த புதன்கிழமை கடுமையான தொனியில் கூறியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
அத்துடன் அதே தினத்தன்று ஈரான் தனது கொன்டாப் அணு உலைக்கு அருகில் தரையில் இருந்து விண்ணுக்கு ஏவும் ஏவுகணையொன்றை பரீட்சித்திருந்தது.

0 commentaires :

Post a Comment