அணு உலை நிறுவனங்களைப் பார்வையிட வருமாறு வெளிநாட்டு நிபுணர்களுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. நீண்ட நாள் முரண்பாடுகளைப் போக்கி ஈரானின் நியாயமான நிலைப்பாட்டை விளக்கும் பொருட்டே இத்தீர்மானத்தை எடுத்ததாக அந்நாட்டின் ஜனாதிபதி அஹமெதி நெஜாத் தெரிவித்தார்.
நடான்ஸ் அர்கா ஆகிய அணு உலைகளை வெளிநாட்டு நிபுணர்கள் பார்வையிடவுள்ளனர். ரஷ்யா, சீனா ஆகியநாடுகளுக்கே ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. மற்றும் ஐரேப்பிய யூனியனின் தலைமைப் பதவி வகிக்கும் ஹங்கேரி மேலும் எகிப்து, கியுபா ஆகிய நாடுகளின் நிபுணர்களையும் ஈரான் அழைத்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் என்பவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. யுரேனியம் செறிவூட்டலில் ஈடுபடும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக மேற்கு நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்த அணு நிலையங்களைச் சோதனையிட வேண்டுமென்ற ஐ.நாவின் கோரிக்கையை மிக நீண்டகாலமாக ஈரான் நிராகரித்து வந்தது ஆனால் தற்போது தனக்கு வேண்டிய நாடுகளை அணுமதித்துள்ளது. மிக நீண்ட நாள் முரண்பாடுகளால் ஈரான் பல சிக்கல்களை எதிர்கொண்டது. பல தடைகளும் ஈரான் மீது விதிக்கப்பட்டன.
மேற்குலகம் ஈரானின் நியாயமான தேவைகளைப் புரிந்து கொள்ள மறுப்பதாலே இந்த இழுபறியேற்பட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் தெரிவித்தார். பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளன. சந்தேகமும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 commentaires :
Post a Comment