1/25/2011

அடுத்த மாதம்அரபு,லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களுக்கு இடையிலான உச்சிமாநாடு

அரபு நாடுகளுடனான உச்சி மாநாடொன்றை அடுத்த மாதம் நடத்தவுள்ள லத்தீன் அமெரிக்க நாடுகள், அதன் மூலம் முதலீடுகளும் வர்த்தக வாய்ப்புகளும் கிடைக்கும் என்று லத்தீன் அமெரிக்க நாடுகள் பரவலாக நம்புகின்றன.
உலகிலேயே அதிக மூலதனத்தையும் சேமிப்புகளையும் கொண்டுள்ள அரபு நாடுகளின் கவனத்தை நாம் முதன் முறையாக ஈர்த்திருக்கிறோம் என்று இந்த உச்சி மாநாட்டை நடத்தும் பேருவின் ஜனாதிபதி அலன் கார்சியா கூறுகிறார்.
தென் அமெரிக்காவின் 12 நாடு களுக்கும் 22 அரபு நாடுகளுக்குமிடை யிலான மூன்றாவது உச்சி மாநாடு அடுத்த மாதம் பேருவில் நடைபெறுகிறது.
உலகின் இரு பிராந்தியங்களுக்கு இடையிலான இந்த உச்சி மாநாடு பொருளாதாரம், கலாசாரம், கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கூட்டுறவு நடவடிக்கைகள் இடம்பெற வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உச்சி மாநாட்டில் பங்குபற் றப் போவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இரு கலாசாரங்களை இணைக்கும் முன் எப்போதும் நடத்திராத இந்த மாநாடு பேரு நாட்டின் வர்த்தக செயற்பாடுகளுக்கு ஒரு உந்து சக்தியாக அமையும் என்றும் அவர் கூறுகிறார்.
பேரு ஏற்கனவே அரபுலக நாடுகளுடன் பொருளாதார உறவுகளை தீவிரப்படுத்தி யுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேருவில் அரபு நாடுகளின் முதலீடு தற்போது 1 பில்லியன் டொலர்களுக்கு மேல் இருந்து வருகிறது.

0 commentaires :

Post a Comment