எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களிலே பாரிய தமிழ் கட்சிகளின் கூட்டணி ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளிலே கடுமையாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஈடுபட்டது ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறாத காரணத்தினால், இத்தேர்தலிலும் நவ சமசமாஜக் கட்சியினுடைய தேர்தல் சின்னமான மேசைச் சின்னத்திலே தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட தீர்மானித்துள்ளது என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.மேலும், எங்களுடைய கட்சி கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலிலே கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவின் இடதுசாரி விடுதலை முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலே வடக்கு கிழக்கு மாகணங்களிலே போட்டியிட்டது. அதேபோன்று இத்தேர்தலிலும் போட்டியிடும் என்பதை நாங்கள் அறிய தருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
____________________________________________________________________________________________
0 commentaires :
Post a Comment