1/31/2011

கிளிநொச்சி மாவட்டம்;

தமிழரசுக் கட்சி ஆதரவாளர்
மத்தியில் பலத்த அதிருப்தி



கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்பாளர் தெரிவிலும் நியமனப்பத்திர தாக்கலில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களிடையே பலத்த அதிருப்தி ஏற்பட்டுள்ளதுடன் இதுவிடயத்தில் பாரபட்சமும் குளறுபடிகளும் மேற்கொண்டவர்கள் மீது கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
பளை பச்சிலைப்பள்ளிக்கும், பூனகரிக்கும் 26ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு தமிழரசுக் கட்சியின் இரு எம்.பிக்களால் சரிபார்க்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி கச்சேரியில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இவ் விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறுகளால் நிராகரிக்கப்பட்டது.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு தமிழரசுக் கட்சியில் போட்டியிட அங்குள்ள பிரதேசவாசிகள் மறுப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து கிளிநொச்சியில் இருந்தே வேட்பாளர்களை ஒப்பமிடவைத்து நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அதில் கிளிநொச்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட புலிகளுக்கு உடந்தையாக இருந்து பொதுமக்களை இம்சித்து வந்த ஒரு ஓய்வுபெற்ற கிராம அலுவலரும், பரீட்சைப் பத்திரத்தில் குளறுபடி செய்து வேலை இழந்த கிராம அலுவலரும் அடங்கி இருந்ததாகவும் தினகரனுக்குத் தெரிவிக் கப்பட்டது.
இதேவேளை, எம்.பி. ஸ்ரீதரனின் நெருங்கிய உறவினர்களையே கரைச்சி பிரதேச சபைக்கு வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாகவும் உண்மையாக நியமனம் செய்ய வேண்டிய தமது விண்ணப்பங்கள் திட்டமிட்டு நிரா கரிக்கப்பட்டதாகவும் அதிக அளவு வாக் காளர்களை கொண்ட கிளிநொச்சி நகர வட்டாரத்திற்கு தமிழரசுக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரையும் நிறுத்தப்பட வில்லை எனவும் கிளிநொச்சி நகர் வாக்காளர்களும் முக்கியஸ்தர்களும் தெரிவித்தனர். நகர அபிவிருத்தி குறித்து இக்கட்சி காட்டும் அக்கறையீனத்திற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

0 commentaires :

Post a Comment