1/16/2011

புதிதாக வெட்டப்பட்ட முகத்துவாரத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்

வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக புதிதாக அகழப்பட்ட முகத்துவாரத்தை கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று(16.01.2011) நேரில் சென்று பார்வையிட்டார். அண்மையில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த்தின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டிருந்தது. இவ் வெள்ள நீரை விரைவாக வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் கல்லடி நாவலடியில் சுமார் 50வருடங்களின் பின்னர் மேற்படி முகத்துவாரத்தினை அகழந்து வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றனார். இதனால் பல குடும்பங்கள் பாதுகாக்கப்பட்டதோடுஇ வெள்ள நீரும் விரைவாக வடிந்தோடியது. 1957ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது மேற்படி முகத்துவாரம் வெட்டப்படட்டது குறிப்பிடத்தக்கது.
_mg_0535
_mg_0528
_mg_98071

0 commentaires :

Post a Comment