1/27/2011

மகாபோதி தாக்குதலுக்கு தமிழக அரசு கண்டனம்

தமிழகத்திலுள்ள இலங்கை நிறுவனங்கள் மற்றும் நலன் பேணல் அலுவலகங்களுக்குப் பூரண பாதுகாப்பை வழங்குவதற்கு தமிழக அரசு இணக்கம் தெரிவித்துள்ளதுடன், சென்னை மகாபோதி மீதான தாக்குதல் சம்பவத்தை தமிழக அரசு வன்மையாக கண்டித்துள்ளது என சென்னையிலுள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் ஜீ. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

பீசென்னை எழும்பூரிலுள்ள மகாபோதி மீதான தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக அறிந்த சில நிமிடங்களிலேயே ஸ்தலத்துக்கு விரைந்து சென்ற துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி, சென்னை சிட்டி பொலிஸ் அத்தியட்சகர் திரு. ராஜேந்திரனுடன் தொடர்பு கொண்டு நிலைமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி உடனடியாக தமிழக அரசின் முக்கியஸ்தர் களுடன் தொடர்பு கொண்டு தமிழகத்திலுள்ள இலங்கை நிறுவனங் களின் பாதுகாப்பு குறித்தும் பேச்சு நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்திலுள்ள இலங்கை வங்கி, எயார் லங்கா, மகாபோதி உள்ளிட்ட இலங்கை நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் கூடுதல் பாதுகாப்பு வழங் கப்பட்டுள் ளதாக துணைத் தூதர் கிருஷ்ண மூர்த்தி தெரி வித்தார்.
இதேவேளை மகாபோதி தாக் குதல் சம்பவம் தொடர் பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் எஸ். மாலதியையும் துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தார்.
இனந்தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்துக்கு தலைமைச் செயலர் எஸ். மாலதி கவலையையும் கண்டனத் தையும் தெரிவித்ததுடன் முழு மையான பாதுகாப்பை வழங்கு வதாகவும் உறுதியளித்தார் என்றும் துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்

0 commentaires :

Post a Comment