உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் அடுத்த மாதம் முதல் திகாமடுல்ல மாவட்டத்திற்கு சீ-பிளேன் விமான சேவையை நடத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அம்பாறை மாவட்ட இராணுவ பயிற்சி பாடசாலையின் தலைமை அதிகாரி கேர்ணல் ஜயம்பதி திலக்கரட்ன தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள குளங்கள் துரிதமாகப் புனரமைப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;
யுத்தம் முடிவடைந்த பின்னர் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள குளங் களைப் புனரமைப்புச் செய்து சீ – பிளேன் விமான சேவையை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.
இதன் ஊடாக கொழும்புக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளை திகாமடுல்ல உள்ளிட்ட கிழக்கு பிரதேசங்களுக்கும் வரவழைக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம்.
உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய பல இடங்கள் கிழக்கு மாகாணத் திலுள்ளன. அப்பிரதேசங்களை மேம்படுத்து வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன.
உல்லாச பிரயாணிகளை கவரும் வகையில் இப்பிரதேசத்தில் வளங்கல் காணப்பட்டாலும் அவற்றினை அபிவிருத்தி செய்வதற்கான எந்தவொரு செயற்பாடும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட வில்லை.
மூன்று தசாப்த யுத்தத்தினால் கிழக்கு மாகாணம் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது நாட்டில் பூரண சமாதானம் ஏற்பட்டு மக்கள் நிம்தியாக வாழ்ந்து வருகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில் உல்லாச பிரயாணிகளின் வரு கையை அதிகரிக்கும் வகையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள குளங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்

0 commentaires :
Post a Comment